ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் ராமானுஜபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் சூரிய சந்திரா - லட்சுமி தம்பதியர். இவர்களுக்குள் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
தனது பேச்சுக்கு லட்சுமி கட்டுப்படவில்லை என்றும், குடும்ப பொறுப்பில் அதிகம் அலட்சியம் காட்டுவதாகவும் கூறி சூரிய சந்திரா குற்றம் சாட்டி வந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 7-ம் தேதியன்று கணவன் - மனைவி இடையே மீண்டும் மோதல் வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த சூரிய சந்திரா, லட்சுமியை அடித்து உதைத்தார்.
இதனால் பதற்றமடைந்த லட்சுமி, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். அப்போது பின்னாலேயே துரத்திய சூரிய சந்திரா, அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார்.
தெருவில் பலரது முன்னிலையிலும் மனைவிவெட்டிக் கொலை செய்தவர், ரத்தம் வழிந்த கத்தியுடன் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் கொலையாளியை கைது செய்தனர்.
மனைவி தனக்கு கட்டுப் படாததால் விரட்டி விரட்டி வெட்டிய இந்த சம்பவம் திருப்பதி மக்களை திகைப்படையச் செய்துள்ளது.