ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரை தவறாக பயன்படுத்தி பண மோசடி செய்த வழக்கில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் அறக்கட்டளை பெயரில் போலியான கணக்கை துவங்கி ரஜினிகாந்த புகைப்படத்தை பயன்படுத்தி சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக அறக்கட்டளையின் அறங்காவலர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
குறிப்பாக குலுக்கல் ஒன்றை நடத்தி 200நபர்களை தேர்வு செய்து இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை தருவதாக கூறி முன்பணம் என்ற பெயரில் பணம் வசூலித்து மோசடி செய்வதாக புகாரில் தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரை பயன்படுத்துதல், ஐடி பிரிவு உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை துவங்கியுள்ளனர். குறிப்பாக வங்கி கணக்கை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.