“கொல்கத்தாவில் மீண்டும் பாலியல் வன்கொடுமை” - சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்.. மயக்க மருந்து கொடுத்து இச்சையை தீர்த்து கொண்ட IIM மாணவன்!

மயக்கம் தெளிந்து எழுந்த மருத்துவர் தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு
“கொல்கத்தாவில் மீண்டும் பாலியல் வன்கொடுமை” - சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்.. மயக்க மருந்து கொடுத்து இச்சையை தீர்த்து கொண்ட IIM மாணவன்!
Published on
Updated on
1 min read

கொல்கத்தாவில் உள்ள IIM கல்லூரியில் இரண்டு ஆண்டு படித்து வந்த மாணவன் மஹாவீர். இவர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மனநல மருத்துவரான இளம் பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் நட்பாக பழகி வந்த மஹாவீர் தனக்கு மனநல பிரச்சனை இருப்பதாகவும், எந்த ஒரு வேலையையும் முழுவதுமாக செய்ய முடிவதில்லை என தெரிவித்துள்ளார். மேலும் அடிக்கடி தனக்கு தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அவர் மீது அக்கறை கொண்ட மருத்துவர் மஹாவீருக்கு அவருடன் தொடர்ந்து பேசி ஆறுதலாக இருந்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் போனிலும் வீடியோ கால் மூலமாகவும் கவுன்சிலிங் கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் மருத்துவரிடம் நன்றாக பழக தொடங்கிய மஹாவீர் தனக்கு நேரில் வந்து கவுன்சிலிங் கொடுக்குமாறு அழைத்துள்ளார். அதனை ஏற்று மருத்துவர் மஹாவீரின் கல்லூரி விடுதிக்கு நேரில் சென்றுள்ளார். மஹாவீர் அறைக்கு சென்றது மருத்துவருக்கு மஹாவீர் குளிர்பானம் கொடுத்துள்ளார்.

அதனை குடித்தவுடன் மயங்கி விழுந்த மருத்துவரை மஹாவீர் பாலியல் வன்கொடுமை செய்து தனது இச்சையை தீர்த்துக்கொண்டுள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த மருத்துவர் தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருப்பதை அறிந்து மஹாவீரிடம் சத்தம் போட்டுள்ளார். இதற்கு பதிலளித்த மஹாவீர் “இத வெளிய சொன்னா உன்ன கொன்னு போற்றுவேன் என மிரட்டி தனது விடுதியில் இருந்து வெளியில் துரத்தி உள்ளார்” ஆனாலும் சட்டம் மீது நம்பிக்கை வைத்திருந்த மருத்துவர் மஹாவீர் பற்றி அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்துள்ளார்.

புகாரை ஏற்றுக் கொண்டு மருத்துவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று மஹாவீரைய் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட மஹாவீர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அடுத்தடுத்து கொல்கத்தாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com