“ஆண் போல இன்ஸ்டாவில் பழகிய தோழி” - காதலித்து 60 சவரன் நகையை கொடுத்த மாணவி.. மகளுக்கு பக்காவாக பிளான் போட்டு கொடுத்த தாய்!

நகைகளை இல்லை என்பதை அறிந்த ரமேஷ் நகை பற்றி தனது மனைவி
“ஆண் போல இன்ஸ்டாவில் பழகிய தோழி” - காதலித்து 60 சவரன் நகையை கொடுத்த மாணவி.. மகளுக்கு பக்காவாக பிளான் போட்டு கொடுத்த தாய்!
Admin
Published on
Updated on
2 min read

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி சாதனா என்ற மகள் உள்ள நிலையில், சாதனா அதே பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் சதானவிற்கும் அவரது தோழிக்கும் இன்ஸ்டாக்ராமில் அபிஷேக் என்ற ஐடியில் உள்ள ஒருவர் நண்பராகி உள்ளார். அந்த அபிஷேக் சாதனாவிடம் தொடர்ந்து பழகி வந்த நிலையில் சாதனா அபிஷேக்கை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சாதனாவிற்கு மெசேஜ் செய்த அபிஷேக் தனக்கு வண்டி வாங்க வேண்டும் என்றும் தனது தாயின் மருத்துவ செலவிற்கு கூட பணமில்லை என கூறி சதானவிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு சாதனா தன்னிடம் பணமில்லை என கூறியதால் “உங்கள் வீட்டில் இருக்கும் நகைகளை உனது தோழியிடம் கொடு அதை வைத்து நான் பணம் வாங்கி கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். எனவே தாது பள்ளி தோழியிடம் மார்ச் ஒன்றாம் தேதி முதல் சாதனா தனது வீட்டில் இருந்த நகைகளை கொடுக்க தொடங்கியுள்ளார்.

இவ்வாறாக சிறுக சிறுக தனது வீட்டில் இருந்த 60 சவரன் நகையையும் தனது இன்ஸ்டா காதலனுக்காக தோழியிடம் கொடுத்துள்ளார். (ஜூலை 07) தேதி ஒரு திருமணத்திற்கு செல்வதற்காக சாதனாவின் தனத்தை பீரோவில் இருந்த நகைகளை தேடியுள்ளார். நகைகளை இல்லை என்பதை அறிந்த ரமேஷ் நகை பற்றி தனது மனைவி மற்றும் மகளிடம் விசாரித்துள்ளார். அப்போது பயந்துகொண்டே சாதனா நகைகளை தனது காதலனிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ் தனது மகள் மற்றும் மகளின் தோழியை அழைத்து கொண்டு குளச்சல் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு சாதனா மற்றும் அவரது தோழியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில். சாதானாவின் தோழி முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் சாதனாவின் தோழியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே காவல் நிலையத்திற்கு வந்த தோழியின் தந்தை பாலசுந்தரம் தனது வீட்டில் இருந்ததாக சில நகைகளை போலீசாரிடம் கொடுத்துள்ளார்.

Admin

அதை பார்த்து தனது நகை என ரமேஷ் உறுதி செய்ததை அடுத்து உண்மையை ஒப்புக்கொண்ட சாதனாவின் தோழி “நான் தான் போலி கணக்கை உருவாக்கி சாதனாவிடமிருந்து நகைகளை வாங்கினேன் எனது தாய்தான் இவ்வாறு செய்ய சொன்னார்” என கூறியுள்ளார். இதனை அடுத்து பாலசுந்தரத்தின் மனைவியை பிடித்து விசாரித்தபோது கடன் தொல்லை அதிகமாக இருந்தது அதை தீர்ப்பதற்கு இவ்வாறு செய்தேன் என தெரிவித்துள்ளார். பின்னர் அவர்களிடம் இருந்து நகைகளை கைப்பற்றிய போலீசார் அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

ஆனால் எங்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விடுவார்களோ என பயந்த தாய் மற்றும் மக்கள் பூச்சு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். இதனை அறிந்த பாலசந்தரம் மனைவி மற்றும் மகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். தாய் மற்றும் மகள் பூச்சு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com