

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேல கலுங்கடி சேர்ந்த போட்டோகிராபரான 34வயதுடைய கார்த்திக் என்பவர் கடந்த மாதம் பணியின் போது திடீரென இறந்ததாக கூறப்பட்ட நிலையில்-வாலிபரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் எட்டு மாதங்களுக்குப் பிறகு திடீர் திருப்பமாக, சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் உயிரிழந்த வாலிபரை கொலை செய்ததாக அவருடைய நண்பர்களான மணிகண்டன்(46), முத்துக்குமார்(34), ஜெய்சிங்(45), வளன் (46) ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலக்கலுங்கடியை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் இவரது மகன் 36 வயதுடைய கார்த்திக். இவர் கேமரா பழுது பார்க்கும் வேலை செய்து வந்த நிலையில் கடந்த (ஜூலை 19) ஆம் தேதி கார்த்திக் மேல கலுங்குடி பகுதியில் உள்ள சாய கம்பெனி பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கார்த்திக் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் தங்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். அதை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். உத்தரவைத் தொடர்ந்து வடசேரி போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் . கார்த்திக்கின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் லேசான காயங்கள் இருந்தது தெரியவந்தது.
எனவே போலீசார் விசாரணை தீவிர படுத்திய போது சம்பவம் நடந்த அன்று கார்த்திக்கிடம் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் 46,முத்துக்குமார் 34,ஜெய்சிங் 45,வளன் 46 ஆகிய நான்கு பேரை பிடித்தனர். பிடிபட்ட அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சம்பவத்தன்று கார்த்திக் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாகவும் கூறினார்கள். அப்போது கார்த்திக் தவறி கீழே விழுந்ததாகவும் தெரிவித்தனர்.
ஆனால் 4 பேரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் கார்த்திக்கை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்ட போது காயமடைந்து கார்த்திக் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் நான்கு பேரும் சேர்ந்து கார்திக்கை அடித்தால் அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து போலீசார் கொலை வழக்காக மாற்றி சம்பந்தப்பட்ட நான்கு பேரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட மணிகண்டன், முத்துக்குமார், ஜெய்சிங்,வளன் ஆகிய நான்கு பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.