கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நண்பனின் மனைவியுடன் கள்ளதொடர்பில் இருந்துது வந்துள்ளார். மத்திய காவலர்-கள்ள காதலியின் வீட்டு முன்பு அவரது மனைவி தனது பிள்ளைகளுடன் போராட்டத்தில் ஈடுப்பட்ட மத்திய காவலரின் மனைவி இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்பநாபபுரம் ஆர்.சி தெரு பகுதியை சேர்ந்தவர் பெர்ஜின். இவர் திரிபுரா மாநிலத்தில் மத்திய காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கடை பகுதியை சேர்ந்த சாந்தி என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து உள்ளார். மேலும் இவருக்கு 15 மற்றும் 12 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் பெர்ஜின், மனைவிக்கு தெரியாமல் சில நாட்களாக தனது நண்பனின் மனைவியுடன் கள்ளகாதலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சாந்தி கணவரை கண்டித்துள்ளார். இதனால், விரக்தியடைந்த அவரது கணவர் பெர்ஜின் நண்பனின் மனைவியான அமலிவனஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை நாகர்கோவிலில் உள்ள கட்டையன்விளை பகுதியில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து பெர்ஜின் மனைவி சாந்திக்கு தகவல் தெரியவந்ததை தொடர்ந்து அவரது கவனர் கள்ளகாதலியோடு வசித்து வரும் நாகர்கோவில் அடுத்த பார்வதிபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். வெகு நேரமாக கதவினை தட்டியும் யாரும் கதவினை திறக்கவில்லை. இதனால் வீட்டின் முன்பு தனது இரண்டு மகன்களோடு அமர்ந்து முற்றுகையிட்டு கணவரை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் பெர்ஜின் மனைவி சாந்தி. இதனால், அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார் சாந்தியிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சாந்தி, 50,000க்கு மேல் சம்பளம் வாங்கியும் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் எதுவும் செய்யாமல் அவரது நண்பனின் மனைவியுடன் தகாத உறவில் இருந்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் , அண்டைவீட்டார் தன்னை இங்கிருந்து வெளியேறுமாறு கூறுவதாகவும், அவர்கள்தான் இவர்களுக்கு வீட்டினை வாடகைக்கு கொடுத்துள்ளதாகவும், எல்லாம் தெரிந்திருந்தது இதை அந்த அண்டைவீட்டார் செய்வதாகவும் கூறினார். மேலும், வனஜாவின் மூத்தமகன் கத்தியை எடுத்து குத்த முயற்சிப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், சாந்தி தனது கணவர் போலீசார் என்பதால் அவருக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி கதறிய சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.