4 குழந்தைகள் உட்பட 9 பேரை பலி கொண்ட பயங்கர விபத்து...

4 குழந்தைகள் உட்பட 9 பேரை பலி கொண்ட பயங்கர விபத்து...

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் டிடி வாகனம் அரசு பஸ் மீது மோதி விபத்து 4 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர்.
Published on

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசி கரே தாலுக்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 69 இல் இன்று அதிகாலை சுற்றுலா பயணிகள் உடன் வந்து கொண்டிருந்தது டிடி வாகனம் ஒன்று அரசு பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 4 குழந்தைகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரு நகரில் இருந்து தர்மஸ்தலா கோவில் சென்று கோவில் தரிசனம் முடித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. டிடி வாகனத்தில் 14 பேர் இருந்த நிலையில் 9 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

மீதமுள்ள 5 பேர் பலத்த காயங்களுடன் ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக ஹாசன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com