
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நெய்தலூர் ஊராட்சி பெரிய பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயதுடைய கார்த்திக். இவர் அதே பகுதியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். சதிஷ் சில வருடங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பெரிய பனையூரில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு ஜோதிகா என்ற பெண் ஆட்டோ டிரைவருக்கும் கார்த்திக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அப்போது கார்த்திக் தகாத வார்த்தைகளால் திட்டி ஜோதிகாவை அடித்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவர் கார்த்திக் மீது தன்னை தாக்கியதாக கொடுத்த புகாரின் படி நங்கவரம் போலீசார் வழக்கு செய்து சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் கடந்த திங்கட்கிழமை செப்டம்பர் 29ம் தேதி ஜாமீனில் வெளிவந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் நேற்று இரவு சித்தப்பா வீட்டில் தனது இரண்டு தங்கையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலையில் ஐந்து நபர்கள் வீட்டின் தகரக் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
இதனை அறிந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் வீட்டின் சுவர் பகுதியில் பயத்துடன் மறைந்து ஒளிந்து கொண்டார். ஆயுதங்களுடன் வந்த ஐந்து நபர்கள் கார்த்திக்கின் தங்கைகளிடம் கார்த்திக் எங்கே என கேட்டபோது அவரது தங்கைகள் புவனா மற்றும் ரம்யா அண்ணன் இல்லை என்று தெரிவித்தனர். எனவே மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை அடித்து பார்த்து மறைந்திருந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக்கை கொடூர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தனர்.
கார்த்திக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்ததை பார்த்து அவரது தங்கைகள் சத்தமிட்டுள்ளனர். அந்த சத்தத்தை கேட்ட அருகில் இருந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் நங்கவரம் போலீசார் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலரிய்ந்த டிஎஸ்பி செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, கரூர் எஸ்பிக்கு தகவல் கொடுத்தார். பின்னர் படுகொலை செய்யப்பட்ட கார்த்திக் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
மேலும் இது குறித்து கைரேகை நிபுணர்கள் மற்றும் லக்கி மோப்பநாய் வரவழைக்கப்பட்டு படுகொலை செய்த நபர்கள் விட்டுச் சென்ற காலணிகள் (செருப்பு) மற்றும் சிதறி கிடந்த ரத்தத்தை மோப்ப நாய் மோப்பம் பிடித்து கொலைகாரர்கள் தப்பி ஓடிய நச்சலூர் தார் சாலையில் சுமார் 500 மீட்டர் சென்று நச்சலூர்- மாடு விழுந்தான் பாறை பிரிவு சாலையில் நின்று கொண்டது. இதுகுறித்து நங்கவரம் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கார்த்திக்கை கொடூர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்த பெரிய பனையூர் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன், கிஷோர் ,பூபதி மற்றும் இரண்டு நபர்கள் தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.