
குளித்தலை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பூச்சொரிதல் நிகழ்வுக்காக கொல்லம்பட்டறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மேளதாளங்கள் முழங்க வாகனத்தில் அம்மனுக்கு பூக்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அப்போது சாமி ஊர்வலம் பேராளம்மன் கோவில் தெருவில் வந்தபோது கூட்டத்தில் ஆடிக்கொண்டிருந்த கொல்லம் பகுதி பட்டறை தெருவை சேர்ந்த ஷியாம் என்ற 17 வயது சிறுவன் மீது பெரிய பாளையத்தை சேர்ந்த நாகேந்திரன் மற்றும் அவரது மூன்று நண்பர்களும் வேண்டுமென்றே மோதியுள்ளனர்.
ஒரு முறை மோதியபோது ஷியாம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நாகேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் மீண்டும் மீண்டும் வம்பிழுக்கும் வகையில் ஷியாம் மீது மோதியுள்ளனர். இதனால் ஷியாமிற்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தின் போது யாரும் எதிர்பாராத விதமாக நாகேந்திரன் அவரிடம் வைத்திருந்த கத்தியை பயன்படுத்தி ஷியாமை சரமாரியாக குத்தியுள்ளார். இதனை பார்த்து அஜய், வசந்தகுமார் இருவரும் தடுக்க முயற்சித்த போது, நாகேந்திரன் அவர்களையும் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் ஷியாம் அதே இடத்தில் உயிரிழந்தார், இதனையடுத்து காயமடைந்த அஜய் மற்றும் வசந்தகுமாரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து நாகேந்திரனையும் அவரது நண்பர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என்றும். இவர்கள் அடிக்கடி அப்பகுதியில் தகராறில் ஈடுபடுவார்கள் என்றும். ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து நமது செய்தியாளர் போலீஸாரிடம் விசாரித்தபோது, கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவர் மீது ஏற்கனவே கஞ்சா பயன்படுத்திய வழக்கு பதிவுசெய்ய பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்