

திருநெல்வேலி, செப். 16: பொறியாளர் கவின் செல்வகணேஷ் கொலை வழக் கில் கைதான சுர்ஜித்தின் பெரியம்மா மகன் ஜெயபாலின் பிணை மனுவை தள்ளு படி செய்து திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் (வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம்) திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த பொறியாளர் கவின் செல்வகணேஷ் (27), காதல் விவ காரத்தில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, பாளையங்கோட் டையைச் சேர்ந்த சுர்ஜித், அவரது தந் தையான காவல் உதவி ஆய்வாளர் சர வணன், சுர்ஜித்தின் பெரியம்மா மகனான தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெய பால் (29) ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.
சிபிசிஐடி போலீஸார் விசாரித்துவரும் இவ்வழக்கில், 3 பேரும் காவல் விசாரணைக்குப் பின் நீதிமன்றக் காவ லில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது நீதிமன்றக் காவல் செப்.23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள் ளது.
இந்த நிலையில் சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணன் பிணை கோரி, கடந்த 12-ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.சரவணனுக்கு பிணை வழங்கி னால் கொலை வழக்கு தொடர்பான சாட்சியங்களை அழிக்கக் கூடும் என அரசுத் தரப்பு வழக்குரைஞர் கந்தசாமி வாதாடிய நிலையில் விசாரணையின் முடிவில், எஸ்.ஐ. சரவணன் தரப்பில் பிணை வழங்கக் கோரி தாக்கல் செய் யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். இந்நிலையில் சுர்ஜித்தின் பெரியம்மா மகனான ஜெயபால் தனக்குப் பிணை வழங்குமாறு செப்.16ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம் மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.விசாரணை முடிவில் ஜெயபாலின் பிணை மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.