புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கண்ணாங்குடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(31), புலியூரை சேர்ந்த லாவண்யா(21) இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில். இவர்களுக்கு 5 மாத ஆதிரன் என்ற ஆண் குழந்தை இருந்திருக்கிறது,குடும்ப தகராறு காரணமாக
மணிகண்டன் வீட்டை விட்டு வெளியேறிய,லாவண்யா தனது பெற்றோர் வீட்டில் கடந்த 3 மாதங்களாக, குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் புலியூரில் பெற்றோர் வீட்டில் வசித்து வரும் லாவண்யா நள்ளிரவில் குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது, அப்போது லாவண்யா திடீரென குழந்தையை காணவில்லை என கத்தி கூச்சலிட்டுள்ளார், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் தாலிச் சங்கிலியை பறித்து கொண்டு குழந்தையையும் தூக்கி சென்றுவிட்டனர் என உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள் வீட்டைச் சுற்றி குழந்தையை தேடி உள்ளனர், அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள தண்ணீர் பேரலில் குழந்தையின் உடல் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து குழந்தையின் தாய் லாவண்யாவை கீரனூர் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணிகண்டன் தரப்பையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். லாவண்யா முண்ணுக்குப்பின் முரணாக தகவல்களை கூறி வருவதால் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்