வேகத்தால் நடந்த விபத்து! பதற வைக்கும் சிசிடிவி!

கேரளாவில் அதிவேகத்தில் வந்த கார் மற்றொரு காரில் மோதி கவிழும் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
வேகத்தால் நடந்த விபத்து! பதற வைக்கும் சிசிடிவி!
Published on
Updated on
1 min read

கேரளா: கோழிக்கோடு - பாலக்காடு நெடுஞ்சாலையில் இன்று காலை 9 மணி அளவில் மலப்புரம், முறையூர் பகுதியில் வைத்து பெட்ரோல் நிரப்புவதற்காக வலது பக்கமாக திரும்பிய காரின் மீது மற்றொரு வாகனத்தை முந்தியது.

பின், அதிவேகத்தில் பின்னால் இருந்து வந்த கார், திரும்ப முயன்ற காரின் பக்கவாட்டு பகுதியில் மோதி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காருக்குள் இருந்த நான்கு பேர் உடனடியாக மீட்கப்பட்டு படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இந்த விபத்து குறித்து கொண்டோட்டி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த விபத்தின் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com