“வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசத்தில் இருந்த அமைச்சர்” - வீடியோ ஆதாரத்துடன் மனைவி அளித்த புகார்… பதவி விலக சொல்லி வலுக்கும் எதிர்ப்பு!

அவரது மனைவி பிந்து மேனனும் இந்த பிரச்சனை இதோடு விட்டுவிடுவதாக தெரிவித்துள்ளார்...
“வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசத்தில் இருந்த அமைச்சர்”  - வீடியோ ஆதாரத்துடன் மனைவி அளித்த புகார்… பதவி விலக சொல்லி வலுக்கும் எதிர்ப்பு!
Published on
Updated on
2 min read

கேரளா மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் கணேஷ் குமார். இவர் 100 க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கும் யாமினி தங்கச்சி என்பவருக்கும் கடந்த 1994ஆம் ஆண்டு திருமணமான நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பின்னர் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2013 விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்தனர். எனவே கணேஷ் குமார் 2014 ஆம் ஆண்டு பிந்து மேனன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது அவரது இரண்டாவது மனைவியான பிந்து மேனன் கணேஷ் குமார் தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும், வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணேஷ் குமாரை வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்ததாகவும் அதனை செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும் போலீசில் புகாரளிந்திருந்தார். ஆனால் போலீசார் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிந்து மேனன் குற்றம்சாட்டினார்.

இந்த தகவல் வெளியில் பரவிய நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களும் காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் கணேஷ் குமார் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள முதலமைச்சர் பினராயி விஜயன் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில் அவர் தனது மனைவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டதாக சொல்லப்படுகிறது. எனவே அவரது மனைவி பிந்து மேனனும் இந்த பிரச்சனை இதோடு விட்டுவிடுவதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கணேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்து வந்த நிலையில் இது குறித்து திருவனந்தபுரத்தில் பேசிய கணேஷ் குமார் “நான் பதவியை ராஜினாமா செய்வேன் என பலரும் எதிர்பார்த்தனர் ஆனால் அது நடக்காது. வேண்டுமானால் அவர்கள் கத்தியை கொடுத்தால் என் கையை வெட்டி தருகிறேன் ஒரு போதும் அவர்கள் நினைப்பதை செய்ய மாட்டேன்” என கூறியுள்ளார். ஒரு அமைச்சர் வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதாக அவரது மனைவியே புகாரளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com