2019ம் தேதி கெவின் பேக்கன் காணாமல் போயுள்ளார். இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டபோது, கெவினின் அறைத்தோழன், கிறிஸ்துமஸ் ஈவ் அன்று கிரிண்டர் (Grindr Dating App ) தளத்தில் ஒருவரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்ததாகத் கூறியுள்ளார். இந்த நிகழ்வினையடுத்து சட்ட அமலாக்கத் துறையினர், கற்பனை செய்ய முடியாத கொடூரமான ஒரு குற்ற நிகழ்விடத்தைக் கண்டுபிடித்தனர். மேலும் கெவின், மிச்சிகனில் உள்ள அப்போதைய 50 வயதான மார்க் லதுன்ஸ்கியின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டார்.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி உள்ளூர் அதிகாரிகளுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமானவராக இருந்துள்ளார். கெவின் கொடூரமாகக் கொல்லப்பட்ட நிலையில், அவனது நிர்வாண உடல் ஒரு மறைவான அறையின் கூரையிலிருந்து தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது அங்கு சென்ற அதிகாரிகளை நிலைகுழைய செய்துள்ளது. குற்றவாளியை கைதுசெய்த பின்புதான் அதிகாரிகளுக்கு உண்மை தெரியவந்துள்ளது. அதாவது, லதுன்ஸ்கி, கெவினைக் கத்தியால் குத்தியதாகவும், அவரது தொண்டையை அறுத்ததாகவும், அதன்பின் அவரைக் கூரை விட்டங்களில் கயிற்றால் தொங்கவிட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இதன் பின்பு கேட்டவை அதிகாரிகளையே கலக்கமடைய செய்துவிட்டது. கெவினின் பிறப்புறுப்பின் ஒரு பகுதியைத் துண்டித்து அதை உண்டதாகவும் குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளார். கெவினின் தந்தை இவ்வாறு கூறினார், "அவன் தயாராக இல்லாத ஒரு விஷயத்தில் சிக்கிக்கொண்டான் என்பது தெளிவாகத் தெரிகிறது. நாம் அனைவரும் தவறுகள் செய்வதுண்டு. அதன் விவரங்களைக் கேட்பதற்கே நெஞ்சைப் பிழிகிறது, நாங்கள் செய்வதறியாது தவிக்கிறோம்" என்று மனமுருகி பேசினார்.
லதுன்ஸ்கியின் இல்லத்திலிருந்து தப்பி ஓடிய பிறகு, அவருடன் முன்பு கிரிண்டர் செயலியில் பழகிய பெண்களில் ஒருவர் பதற்றத்துடன் 911-க்கு அழைத்துள்ளார். இதுகுறித்து லதுன்ஸ்கியுடன் பழகிய இருவரிடம் விசாரித்தபோது அவர்கள், வழக்குத் தொடர வேண்டாம் என முடிவுசெய்தனர். லதுன்ஸ்கியுடனான தங்களின் அந்தரங்க சந்திப்புகள் பரஸ்பர சம்மதத்துடன்தான் நடந்தன என்றும், ஆனால் தாங்கள் வெறுமனே "பயந்துவிட்டோம்" என்றும் அவர்கள் தெளிவுபடுத்தினர். 2022 செப்டம்பரில், தனது திட்டமிடப்பட்ட ஜூரி விசாரணைக்கு சில வாரங்களுக்கு முன்னதாக, அப்போதைய 53 வயதான லதுன்ஸ்கி, கெவினைக் கொன்று உடலைத் துண்டுகளாக்கியதை ஒப்புக்கொண்டார். இதன் விளைவாக, முதல்நிலைக் கொலைக் குற்றத்திற்காக அவருக்குப் பரோலில் வெளிவர வாய்ப்பில்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், சடலத்தை அவமதித்து சிதைத்த குற்றத்திற்காக விதிக்கப்பட்ட தண்டனையுடன் கூடுதலாக 11 மாதங்கள் சிறைத்தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.