சென்னை, கொடுங்கையூர் சேர்ந்த பொறியியல் படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பற்றி போலீசார் விசாரணையில் கீழ்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்த "பால் யூட்டிகேஸ் ஜேசுதாஸ்" என்ற மாணவன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, செல்போன் பயன்பாட்டில் அதிகம் மூழ்கி, தூக்கமின்மை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். இதன் காரணமாக, தனியார் மருத்துமனையில் இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று, அவ்வப்போது கவுன்சிலிங் சென்றுவந்துள்ளார்.
இந்த நிலையில், செல்போன் பயன்பாட்டை நிறுத்த முடியாமல் அதிக மன அழுத்தத்திற்கு ஆளான அவர், நேற்று இரவு தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டின் அருகில் இருந்த ஒரு மருந்தகத்தில் கால்நடைகளுக்கு, செலுத்தும் ஊசியை வாங்கியுள்ளார்.
இன்று அதிகாலை மூன்று மணி அளவில், கழிவறைக்கு சென்ற அவர் அந்த ஊசியில் சோடியம் நைட்ரேட் மருந்தை பயன்படுத்தி , உடலில் உட்செல்லுத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று இரவு"பால் யூட்டிகேஸ் ஜேசுதாஸ்"அவரது உடன் பிறந்த தங்கையிடம் "அப்பாவை பத்திரமா பாத்துக்கோ நீயும் பத்திரமா இரு" என்று கூறிவிட்டு பிறகு தூங்க சென்றதாக போலீஸ் விசாரணையில், அவருடைய தங்கை தெரிவித்து இருக்கிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியினர் மற்றும் அதிகமாக போன்களில் அடிமையாகும் இளைஞர்களுக்கு பெரும் சோகத்தை உண்டாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்