தகாத உறவால் பறிப்போன உயிர்...!!

தகாத உறவால் பறிப்போன உயிர்...!!
Published on: 
Updated on: 
1 min read

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர் இருளப்பன்.  இவருக்கு கள்ளிப்பட்டியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணுடன் அறிமுகம் உண்டானது.  ஏற்கெனவே பெருமாள் என்பவரை திருமணம் செய்து கொண்ட செல்விக்கு 3 மகன்கள் இருந்தபோதும், இருளப்பனுடன் இணக்கமான உறவை மேற்கொண்டு வந்தார். 

இந்நிலையில் சமீபகாலமாக இருளப்பனுக்கு காசநோய் தாக்கம் அதிகமானதைத் தொடர்ந்து அதையே காரணமாய் வைத்து மெல்ல மெல்ல விலகத் தொடங்கினார் செல்வி.  இதனால் ஆத்திரமடைந்த இருளப்பன், பல நாட்களாக கள்ளக்காதலி செல்வியை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்தார்.  இதனிடையே கடந்த 9-ம் தேதியன்று ஆட்டுக்கு புல் அறுப்பதற்காக வெளியே சென்றார் செல்வி. 

அப்போது காட்டுப்பகுதிக்கு சென்ற இருளப்பன், செல்வியை மறித்து பேசியதுடன், தனியாக இருக்கும் படி அழைத்துள்ளார்.  இதற்கு உடன்படாததால் கோபமடைந்த இருளப்பன் செல்வியை அரிவாளால் சரமாரியாக வெட்டியதோடு, கழுத்தில் கிடந்த தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.  இந்த சம்பவம் குறித்து விரைந்த அல்லிநகரம் போலீசார் நகைகளுடன் தப்பியோடிய இருளப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com