இன்னும் இந்த சிக்னல் எத்தனை காவு வாங்க போகுதோ?

போச்சம்பள்ளி 4 வழிச்சலையில் தொடரும் விபத்துக்களால் நெஞ்சை பதபதவைக்கும் CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது.
இன்னும் இந்த சிக்னல் எத்தனை காவு வாங்க போகுதோ?

கிருஷ்ணகிரி | போச்சம்பள்ளி நான்கு வழிச்சாலையில் நாள்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்ப்பட்ட கனராக, நான்கு சக்கர இருசக்கர வாகனங்கள் என சென்று வருகின்றனர்.

மேலும் போச்சம்பள்ளி அடுத்த ஒலைப்பட்டியில் தமிழக அரசு சிப்காட் வளாகம் அமைக்கப்பட்டு அதில் ஓலா கம்பெனி, ஷு கம்பெனி மற்றும் கார்பன் கம்பெனி என 30க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவங்கள் இயங்கி வருகின்றது.

இதில் நாள்தோறும் சுழற்சி முறையில் 50ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த ஊழியர்கள் பயன்படுத்தும் பிரதான சாலையான திருப்பத்தூர்-தருமபுரி நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் பூ கடை மற்றும் பழக்கடைகள் தள்ளு வண்டி கடை ஆக்கிரமிப்பால் நாள்தோறும் வாகன நெரிசல் மற்றும் கூட்ட நெரிசலில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்பொழுது பொதுமக்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் வாகன ஓட்டிகள் செல்ல முன்னேர்பாடுகள் எதுவும் செய்யாமல் அதிகாரிகள் அலச்சியம் காட்டி வருவதால் சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கப்பட்டு தற்பொழுது வாகனங்கள் செல்லமுடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற இப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே அசம்பாவிதம் நடக்கும் முன் நான்கு வழி சாலையில் வேகத்தடையோ அல்லது ரவுண்டானா அமைக்க வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி கோட்டப்பொறியாளர் சரவணன் அவர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபொழுது : இந்த மனு குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் இந்த மனு பரிசினிலையில் உள்ளது.

போச்சம்பள்ளி தாசில்தாரிடம் கேட்டு விரைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் இன்று நெடுஞ்சாலை அதிகாரிகளை நேரில் அனுப்பி விசாரிக்க சொல்கிறேன் என்று அழைப்பை துண்டித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com