திருச்சியில் நள்ளிரவில் நடந்த அரிவாள் வெட்டு..! அண்ணண் கண்ணெதிரே பரிதாபமாய் உயிரிழந்த தம்பி!!

உமாசங்கர் சென்னையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ....
murder at trichy
murder at trichy
Published on
Updated on
1 min read

ஏதேனும் ஒரு நல்ல நாள் பெருநாள் என்றால், மகிழ்ச்சியான தருணங்கள் இருக்க வேண்டும் தான் என அனைவரும் நினைப்போம். ஆனால் சில மனிதர்கள் விழாக்காலங்களை பகையை தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பமாக கருதுகின்றனர். 

அப்படி ஒரு கோர சம்பவம் தன திருச்சியில் நிகழ்ந்துள்ளது. திருச்சி மாநகரம் வரகனேரி பகுதியை சேர்ந்தவர்கள் அழகேஸ்வரன்(37) மற்றும் உமா சங்கர்(33). இவர்கள் இருவரும் சகோதரர்கள்.

 இதில் அழகேஸ்வரன் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார், உமாசங்கர் சென்னையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு உமா சங்கர் மற்றும் அழகேஸ்வரன் இருவரும் வரகனேரி பெரியார் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் இருவரையும் சரமாரியாகதாக்கியுள்ளனர். 

இதில் படுகாயம் அடைந்த உமாசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அழகேஸ்வரனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காந்தி மார்க்கெட் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து உள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளிக்கு முதல்நாள் சகோதரர்கள் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com