“சித்ரவதை தாங்க முடியாத ஆசிரியை” - உடலை அப்புறப்படுத்த உதவிய மாணவர்கள்.. கணவனை கொலை செய்ததன் பின்னணி!

பார்த்துக் கொண்ட நிலையில் அதன் பிறகு தினமும் குடித்துவிட்டு வந்து நிதியை கொடுமை படுத்தி வந்திருக்கிறார்.
nithi nd shanthanu
nithi nd shanthanu
Published on
Updated on
2 min read

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் நிதி தேஷ்முக், இவர்  அதே பகுதியில் உள்ள சன்ரைஸ் என்ற தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  நிதி அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த 32 வயதான சாந்தனு அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணமாகி ஒரு மாதம் மட்டுமே சாந்தனு நிதியை நன்றாக பார்த்துக் கொண்ட நிலையில் அதன் பிறகு தினமும் குடித்துவிட்டு வந்து நிதியை கொடுமை படுத்தி வந்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் சாந்தனு கொடுத்த டார்ச்சர் தாங்கி கொள்ள முடியாத நிதி சாந்தனுவை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார்.

நிதியின் திட்டத்தின் படி 13 தேதி இரவு, அவர் வாங்கி வைத்திருந்த விஷமாத்திரையை சாந்தனுவிற்கு, வைட்டமின் மாத்திரை என்று சொல்லு நிதி கொடுத்துள்ளார். அதை நம்பி சாந்தனுவும் மாத்திரை போட்டு சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சாந்தனுவின் உடலை மறைக்க நிதி தன்னிடம் டியூஷன் படித்த மூன்று மாணவர்களிடம் உதவி கேட்டுள்ளார். மாணவர்கள் உதவ ஒப்புக் கொண்டதையடுத்து நிதியும் மாணவர்களும் சேர்ந்து சாந்தனுவின் உடலை யவத்மால் பகுதியில் உள்ள சௌசலா காட்டிற்கு கொண்டு சென்று அங்கு போட்டு விட்டு வந்துள்ளனர்.

வீட்டிற்கு வந்த நிதி எங்கு உடலை போலீஸ் கண்டுபிடித்து விடுவார்களோ, என்று பயந்து வீட்டில் இருந்து பெட்ரோலை எடுத்து கொண்டு சாந்தனு உடலை போட்ட காட்டு பகுதிக்கு சென்று பெட்ரோல் ஊற்றி உடலை எரித்து உள்ளார். உடல் முழுவதும் எரியாமல் போனதால் யவத்மால் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சாந்தனு அணிந்திருந்த சட்டை மற்றும் அவரது DNA மாதிரிகளை வைத்து கண்டெடுக்கப்பட்ட உடல் சாந்தனு என்று உறுதிப்படுத்திய போலீசார். சாந்தனுவின் நண்பர்களிடம் விசாரணை செய்தனர். பின்னர் நிதியிடம் விசாரணை மேற்கொண்டபோது நிதி அளித்த பதிலில் சந்தேகம் அடைந்த போலீசார் நிதியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் நிதி சாந்தனுவை மாத்திரை கொடுத்து கொள்ளை செய்ததும் மாணவர்களின் உதவியோடு கட்டு பகுதிக்கு எடுத்துச் சென்றதும். பின்னர் தான் மட்டும் தனியாக சென்று உடலை எரித்ததும் தெரியவந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com