

மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தின் டைரக்டர் சிதம்பரம் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள காவல்துறை திங்களன்று உறுதிப்படுத்தியுள்ளது.
2024 வெளியான மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் இயக்குனராக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தந்தது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மஞ்சும்மெல் பாய்ஸ், உலகளவில் 240 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த இந்திய படங்களில் ஒன்றாக உருவெடுத்தது. மேலும் இப்படம் தமிழ் மற்றும் பிற மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றது.
தற்போது இயக்குனர் சிதம்பரத்தின் மீது மலையாள பெண் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளர். 2022 ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் முறையான புகார் அளித்ததை அடுத்துள்ளார். அதில் 2022 -ல் கொச்சியில் உள்ள எலம்குளம் பகுதியில் உள்ள புகார்தாரரின் அடுக்குமாடி குடியிருப்பில் சிதம்பரம் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொண்டதாகவும் இயக்குனர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து அந்த பெண் எர்ணாகுளம் தெற்கு போலீஸில் புகார் அளித்துள்ளர். அதனை தொடர்ந்து இயக்குனரின் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 74, 75 ஆகிய பிரிவுகளின் படி, ஒரு பெண்ணின் அடக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன், அவரைத் தாக்குவது, பாலியல் ரீதியான தவறான சைகைகள், கருத்துகள், பாலியல் கோரிக்கைகள் அல்லது தேவையற்ற பாலியல் தொடுதல் ஆகிய குற்றங்களின் கீழ் வழக்கு பதிந்துள்ளது.
எர்ணாகுளம் தெற்கு காவல்துறை ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. சிதம்பரம் இன்னும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை எனவும் தெரிகிறது. இந்த வழக்கின் படி குற்றவாளி என முடிவானால் அவருக்கு 1 முதல் 5 ஆண்டுகள் மற்றும் அபராதம் விதிக்கவும் வாய்ப்புள்ளது.
விசாரணைக்கு ஆஜராகுமாறு திரைப்பட இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் தேவைப்பட்டால் அவரை கைது செய்யக்கூடும் எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.