சென்னை மெரினாவில் பரபர...ஆன்லைன் ரம்மியால் ரூ.16 லட்சம் பணத்தை இழந்த நபர் பலி...!

சென்னை மெரினாவில் பரபர...ஆன்லைன் ரம்மியால் ரூ.16 லட்சம் பணத்தை இழந்த நபர் பலி...!
Published on
Updated on
1 min read

சென்னையில் ஆன்லைன் ரம்மியால் ரூ.16 லட்சம் பணத்தை இழந்த நபர் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.கே.நகர், பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் வெளியே சென்ற நிலையில், வீடு திரும்பாமல் இருந்துள்ளார், உடனே, கணவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராமல் இருப்பதால் சந்தேகமடைந்த சுரேஷின் மனைவி ராதா, கணவன் தொலைபேசியை ஆய்வு செய்துள்ளார்.

அப்போது அவருக்கு திடுக்கிடும் வீடியோ ஒன்று சிக்கியது. அந்த வீடியோவில், ”ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துவிட்டேன், எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்" என கடிதம் எழுதி அதை  படம் பிடித்து வைத்து இருப்பது தெரிய வந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி ராதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு, சுரேஷ் மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்நிலையில் சுரேஷின் உடலை கைப்பற்றிய போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com