பிளாஸ்டிக் கவரோடு சுற்றிய நாய்..! 19 துண்டுகளாக்கப்பட்ட உடல்! தோப்பு வீட்டில் நடந்த பயங்கரம்!!

உடல் உறுப்புகளை வைத்து பிரேத பரிசோதனை நடத்தியதில், இறந்துபோனது ஒரு பெண் என்பதை....
dentist killed his mother - in- law
dentist killed his mother - in- law
Published on
Updated on
1 min read

நாட்டில் நாளுக்கு நாள் கொலைகளும், வன்கொடுமைகளும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு அதிகரித்து வருகின்றன. அதுவும் கொலைகள் என்றால் எதோ ஆத்திரத்தில், தற்காப்புக்காக என்பதை விடவும், பழிவாங்கும் எண்ணத்தில் கூலிப்படையை ஏவி மிகவும் திட்டமிட்டு கொலைகள் நடக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கொலை தான் கர்நாடகாவிலும் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் தமக்குரு என்ற பகுதியில்தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.  சென்ற 7 -ஆம் தேதி ஒரு பிளாஸ்டிக் கவரில் மனித கையோடு நாய் ஒன்று சுற்றி வருவதை பார்த்த மக்கள் அதிர்ந்துபோய் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கையை கைப்பற்றி, தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். தொடர்ந்து 8-ஆம் தேதி தலையை தவிர மற்ற உடல் பாகங்கள் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டதை கண்டுபிடித்தனர். 

இந்த உடல் உறுப்புகளை வைத்து பிரேத பரிசோதனை நடத்தியதில், இறந்துபோனது ஒரு பெண் என்பதை தெரிந்துகொண்டனர். 

இதற்கிடையில் பெண்ணின் தலை பகுதியும் கிடைக்கவே கொலை செய்யப்பட்ட நபர் 42 வயதான லட்சுமி தேவி என்பது தெரிய வந்துள்ளது.

லட்சுமி தேவிக்கும் அவர் கணவருக்கும் ஒரு மகள் இருக்கிறார், அவர் அப்பகுதியில் நல்ல பல் மருத்துவரான ராமச்சந்திரய்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ராமச்சந்திரய்யாவிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் லட்சுமி தேவியின் மகளை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.  இவர்கள் இருவருக்கும் 20 வயது வித்யாசம் இருந்துள்ளது. இந்நிலையில் மாமியாருக்கும் மருமகனும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருந்துள்ளது. மேலும் லட்சுமி தேவிக்கு வேறு சில ஆண்களோடு தொடர்பிருப்பதாகவும் அதனை மருமகன் கண்டித்ததால் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் மாமியரின் தொல்லையிலிருந்து தப்பிக்க அவரை தீர்த்துக்காட்டுவதுதான் ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்துள்ளார். 

தனது வாக்கிங் நண்பரான சதீஷ் என்பவரை அழைத்து அவரிடம் இந்த கொலை திட்டம் பற்றி விவரித்துள்ளார். மேலும் இதை கச்சிதமாக செய்துமுடித்தால் ரூ.4 லட்சம் தருவதாக பேசி முன் பணமாக ரூ.50,000 தந்துள்ளார். உடனே சதீஷ் தன்னுடன் தனது கூட்டாளி  கிரனையும் இத்திட்டத்தில் இணைத்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் லட்சுமி தனது மகள் வீட்டிற்கு வரும்போதே வழியிலேயே கடத்தி ஆரை கழுத்தை நெரித்து கொன்று,  ராமச்சந்திரய்யாவிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் அவரின் இறந்த உடலை 19 பாகங்களாக வெட்டி வெவ்வேறு இடத்தில் வீசியுள்ளனர்.

அப்பகுதியில் பேமஸ் -ஆன பல் மருத்துவர் தனது மாமியாரை 19 துண்டுகளாக வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com