“சேலை பிடிக்கவில்லை..” மணப்பெண்ணை இருப்புக்கம்பியால் தாக்கி, சுவரில் மோதி…! திருமணத்திற்கு 1 மணி நேரம் முன்பு நடந்த கோரம்!!

நேற்று இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆக இருந்த நிலையில், திருமண நாளன்று காலையில் ....
man killed wife to be
man killed wife to be
Published on
Updated on
1 min read

சமூகம் நாளுக்கு நாள் வன்முறைகளால் மலிந்து வருகிறது.  அதிலும் இளைஞர்கள் மிகவும் ‘Impulsive’ -ஆன உளவியலை கொண்டுள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.  இந்த உளவியல் சிக்கலில் பெரும்பாலான நேரங்களில் பெண்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் இந்தியா முழுக்க இளைஞர்கள் தாங்கள் காதலிக்கும் அல்லது காதலிக்கப்படும் நபர்களால் கொல்லப்படுகின்றனர். காதல் எப்படி மூர்க்கத்தனமான கொலை வெறியாக மாறுகிறது? அந்த அளவுக்கு மனிதத்தை மீறும் வன்மம் நிறைந்த சூழலில் வாழ்கிறோமா என்ற அச்சமும் எழுகிறது. 

குஜராத்தின் பாவ்நகரில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. திருமணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே மணமகன் மணப்பெண்ணை இருப்புக்கம்பியால் தாக்கி, கொலைசெய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

man killed bride to be - pc NDTV
man killed bride to be - pc NDTV
Summary

சஜன் பரையாவும், சோனி என்ற பெண்ணும் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக ‘லிவ் இன்’ உறவில் இருந்து வந்துள்ளனர். இவர்களுக்கு பெற்றோர் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் இவர்கள் இருவரும், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து உள்ளார். நேற்று இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆக இருந்த நிலையில், திருமண நாளன்று காலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திருமணச்சேலை பிடிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது அப்படியே வரதட்சணை, பணப்பிரச்சனை என நகர்ந்து பெரும் சண்டையாக மாறி உள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சஜன், சோனியை இரும்புக்கம்பியால் தாக்கி, சுவற்றில் அவரின் தலையை மோதி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். போலீசார் சோனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்தி, குற்றம் சாட்டப்பட்ட சஜனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருமண நாளுக்கு முதல் நாளில் அண்டை வீட்டாரோடு, தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இவர் மீது 2 FIR பதிவுசெய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com