“அம்மா, அப்பா தூங்கிட்டு இருக்காங்க” - அழுகிய சடலத்துடன் 4 நாட்கள் வீட்டுக்குள்ளே இருந்த மகன்..!! நெஞ்சை உலுக்கும் சோகம்!!

.இரண்டு, மூன்று நாட்கள் கடந்த பிறகும் பெற்றோரை தொடர்புகொள்ள முடியாததால், செய்வதறியாது திகைத்த அவர், தனது உறவினர்...
man lives with mom dead body
man lives with mom dead body
Published on
Updated on
1 min read

டெல்லி ஜாமியா நகரில், இறந்து போன தாயின் உடலை வைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளே இருந்த மகன். தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் காவல்துரையினரால் மீட்பு.

டெல்லி ஜாமியா நகரில் ஒரு இசைப் பள்ளி ஆசிரியர் (70)  தனது மனைவி (65) மற்றும் மகன் (45) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். மகனுக்கு மன நிலை சரியில்லாததால், அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.  இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். அவர் பாங்காக்கில் வசித்து வருகிறார். இந்த சூழலில்தான், அவர் தனது பெற்றோருக்கு தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டுள்ளார், ஆனால் அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை. இரண்டு, மூன்று நாட்கள் கடந்த பிறகும் பெற்றோரை தொடர்புகொள்ள முடியாததால், செய்வதறியாது திகைத்த அவர், தனது உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு நேரில் விசாரிக்க சொல்லியுள்ளார்.

உறவினர் வீட்டிற்கு சென்று பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை, ஆனால் அவரின் சகோதரர் பேச்சுக்குரல் மட்டும் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அக்கபக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே உள்ள ஒரு அறையில் அவரின் தாயார் இறந்த நிலையில் கிழந்துள்ளார், அவரின் உடல் அழுக துவங்கியிருப்பது தெரியவந்தது. மேலும் அவரின் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் படுக்கையின் கீழே கிடந்துள்ளார். அவரை உடனடியாக 

4 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இறந்த உடலுடன் இருந்த மன நலம் பாதிக்கப்பட்ட மகனை விசாரித்தபோது “அம்மா, அப்பா தூங்கிகிட்டு இருக்காங்க’ என சொல்லியுள்ளார். இறந்த தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். 

இவர்களின் மகள் பாங்காக்கில் இருந்து வந்த உடன் அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com