விளையாட்டில் தோற்றதற்கு இப்படி ஒரு செயலா....? தண்டனை கொடுத்த நீதிமன்றம்...!

விளையாட்டில் தோற்றதற்கு இப்படி ஒரு செயலா....? தண்டனை கொடுத்த நீதிமன்றம்...!
Published on
Updated on
1 min read

சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் தாயம் விளையாடிய போது, ஆனந்தன் என்பவரை தனசேகர் என்பவர் தோற்கடித்துள்ளார். சில நாட்கள் கழித்து சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தி கொண்டிருந்த தனசேகரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய ஆனந்தன், கத்தரிக்கோலால் மார்பின் இடது பக்கத்தில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த தனசேகரரை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தனசேகர் இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து  சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஆனந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்படி அவர் கைது செய்யப்பட்டார். இத்தொடர்பான வழக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எல். அப்ரஹாம் லிங்கன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் என்.ஜெய்சங்கர் ஆஜரானார். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட ஆனந்தனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com