“இரவில் நடந்த பிறந்தநாள் பார்ட்டி” - கண்ணை மறைத்த கஞ்சா போதை.. நண்பர்கள் வெட்டிக் கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

கொலை முயற்சி வெளிபறி உள்ளிட்ட 20 மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
jagan and vimal
jagan and vimal
Published on
Updated on
1 min read

சென்னை அடுத்த மறைமலைநகர் நகராட்சி காந்தி நகர் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் விமல் மற்றும் அதே பகுதியை சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் ஜெகன் இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.

ஜெகன் மற்றும் விமல் இருவரின் மீது மறைமலைநகர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில், கொலை முயற்சி வெளிபறி உள்ளிட்ட 20 மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜெகன் மற்றும் விமல் நேற்று இரவு சகா நண்பர்களுடன் மறைமலை நகரில் நடந்த ஒரு நண்பரின் பிறந்தநாளில் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது ஜெகன் மற்றும் விமலும்  உடனிருந்த சக நண்பர்களும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர்.

போதையில் இருந்ததால் சக நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அது தகராறாக  முற்றி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஜெகன் மற்றும் விமல் மாறி மாறி தாங்கிக்கொண்டும் அருகில் இருந்த கற்களாலும் ஆயத்தங்களை பயன்படுத்தியும்  தாக்கிக் கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் விமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஜெகனை மீட்ட அருகில் இருந்த பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஜெகனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com