“கணவரின் நண்பருடன் கள்ள தொடர்பில் இருந்த மனைவி” - நம்பி வீட்டிற்குள் சேர்த்த ஆட்டோ ஓட்டுநர் செய்த துரோகம்.. நள்ளிரவில் நடந்த கொலை!

தங்கதுரைக்கு சம்பத்குமாரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது...
thangadurai and sambath kumar
thangadurai and sambath kumar
Published on
Updated on
2 min read

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வாழ்க்கை கிராமத்தில் வசித்து வந்தவர் 45 வயதுடைய தங்கதுரை. இவர் ஆடு, மாடுகள், மோட்டார் வாகனங்கள் வாங்கி விற்பது, விவசாயம் மற்றும் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வலக்கை கிராமத்தை ஒட்டி உள்ள கூடலூர் பகுதியில் 45 வயதுடைய சம்பத்குமார் என்பவரது வீட்டு வாசலில் தங்கதுரை காயங்களுடன் இறந்து கிடந்த நிலையில் அருகிலேயே அவரது ஆட்டோவும் இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற செம்பனார்கோவில் போலீசார், தங்கதுரை உடலை கைப்பற்றினர். மேலும் சடலமாக கிடந்த சம்பத்குமார் வேறு சமூகத்தினர் என்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வராமல் இருப்பதற்காக உடனடியாக தங்கதுரை உடலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து தங்கதுரை இறந்து கிடந்த வீட்டின் உரிமையாளரான சம்பத்குமார் தான் தன் மகனை கடைசியாக அழைத்து சென்றதாக தங்கதுரையின் தந்தை ராதாகிருஷ்ணன் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

புகாரின் பேரில் போலீசார் சம்பத்குமாரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், மயிலாடுதுறை பொதுப்பணித்துறையில் கட்டிட பிரிவு உதவியாளராக பணியாற்றி வரும் சம்பத்குமார் மனைவி மற்றும் தனது 2 பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் சம்பத்குமாரும் தங்கதுரையும் நண்பர்களாக பேசி பழகி வந்த நிலையில் அடிக்கடி இருவரும் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர். இதன் காரணமாக சம்பத்குமார் வீட்டுக்கு தங்கதுரை அவ்வப்போது சென்று வருவது வாடிக்கையாக இருந்துள்ளது.

Admin

இந்நிலையில் தங்கதுரைக்கு சம்பத்குமாரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. எனவே சம்பத்குமார் எட்டில் இல்லாத நேரத்தில் தங்கதுரை அவரது மனைவியுடன் தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிது. இதனால் சம்பத்குமாருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தாராறு ஏற்பட்டு வந்ததால் சம்பத்குமாரின் மனைவி கோபித்துக் கொண்டு கடந்த மாதம் சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனம் வெறுத்துப் போன சம்பத்குமார் சரியாக அலுவலகம் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

எனவே நேற்று மதியம் தங்கதுரை சம்பத்குமார் அழைத்ததன் பேரில் அவர் ஆட்டோ எடுத்துக் கொண்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து ஆட்டோவில் இருவரும் சென்று பல்வேறு இடங்களில் மது அருந்திய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சண்டையில் போதை மயக்கதில் இருந்த தங்கதுரையை, சம்பத் குமார் அடித்து கழுத்தில் கயிறு போட்டு இறுக்கி கொலை செய்துவிட்டு வீட்டுக்குள் சென்று போதையில் உறங்கியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப்புதிவு செய்து சம்பத்குமாரை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மனைவியுடன் கள்ள தொடர்பில் இருந்த நண்பனை கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com