ஆசை வார்த்தைக்கூறி 4 மாணவிகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி... 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய கோர்ட்டு!

ஆசை வார்த்தைக்கூறி 4 மாணவிகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி... 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய கோர்ட்டு!

நாமக்கல் அருகே 4 பள்ளி மாணவிகளை கடத்தி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Published on

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ராம்ஜி நகரை சேர்ந்தவர் ராமதாஸ்.  கூலித்தொழிலாளியான இவர், கடந்த 2020-ம் ஆண்டு,  அப்பகுதி பள்ளி மாணவிகள் நான்கு பேரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினா், ராமதாசை கைது செய்து சிறையில்  அடைத்தனா். இந்நிலையில், இந்த வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், குற்றவாளி ராமதாசுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 48 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com