கள்ளத்தொடர்பு மோதலால் கூலித்தொழிலாளி தடியால் அடித்து கொலை…  

கூலித்தொழிலாளியை தடியால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில்,  கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட பிரச்சனையில் கொலை செய்யப்பட்டது  போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கள்ளத்தொடர்பு மோதலால் கூலித்தொழிலாளி தடியால் அடித்து கொலை…   
Published on
Updated on
2 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செம்மனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கலியன் மகன் வேலு வயது 50 இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தமமேரி வயது 42 என்பவர்  செம்மனந்தல் பேருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலை ஆஞ்சநேயர் கோயில்  அருகே உள்ள பேக்கரி கடையில் தின கூலிக்கு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை ஆஞ்சநேயர் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக லாரிகள் நிறுத்துமிடத்தில் வேலுவை யாரோ மர்ம நபர்கள் தடியால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக வீட்டிலிருந்த தவம் ஏரிக்கு தகவல் சொன்னதாகவும், அதன் பின்னர் வந்து பார்த்தபோது வேலு தலையில் படுகாயம் ஏற்பட்டு சுயநினைவில்லாமல் கடந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக திருநாவலூர் காவல் ஆய்வாளர் சீனிவாசனுக்கு தகவல் கிடைக்கப் பெற்று விரைந்து சென்று சுயநினைவு இல்லாத கிடந்த அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தலையில் படுகாயம் ஏற்பட்டதால் வேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக திருநாவலூர் போலீசார் கூலித் தொழிலாளியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடி கொலையாளி யார் என்று சம்பவம் நடந்த அரைமணி நேரத்திலயே திருநாவலூர் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அவர்கள் மடக்கி பிடித்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று எதற்காக தடியால் அடித்து கொலை செய்தனர் என்று கொலையாளியிடம் விசாரணை மேற்கொண்டபோது கொலை செய்த நபர் அரியலூர் மாவட்டம், செந்தூரை  தாலுகா குழமூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் பச்சைமுத்து  வயது 45 என்பவர் என தெரியவந்தது. இந்த நிலையில், கொலைக்கான காரணம் கள்ளத்தொடர்பால் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com