தந்தையுடன் உடலுறவில் இருந்த 20 வயது மகள்! - கணவனையும் கொடுமைப்படுத்திய கொடூரம்

முறையற்ற உறவுமுறை கண்டறியப்பட்டதை அடுத்து, தந்தையும் மகளும் கைது செய்யப்பட்டனர்.
முறையற்ற உறவில் தந்தை மகள்
முறையற்ற உறவில் தந்தை மகள் முறையற்ற உறவில் தந்தை மகள்
Published on
Updated on
1 min read

மினசோட்டாவின் டலூத் நகரில், அக்டோபர் 28 அன்று ஒரு வீட்டிற்கு காவல்துறை அனுப்பப்பட்டது. ஜேனட் ஆன் மார்டினெஸின் 54 வயதான கணவர், 20 வயதான மார்டினெஸ் (மனைவி) தன்னைத் தாக்கியதாக போலீசாரிடம் புகாரளித்தார். அதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக, தனது மனைவி அவருடைய சொந்தத் தந்தையுடன் உறவு கொண்டிருந்ததாகவும் அவர் காவல்துறையிடம் தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் அவரது அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றனர். அங்கு மார்டினெஸும் 60 வயதான தந்தை ஷாட்டோவும் காணப்பட்டனர். மார்டினெஸ் தன்னுடன் வசிக்கவில்லை என்றும், ஆனால் வார இறுதி நாட்களில் என்னை வந்து பார்த்து செல்வார் என்றும் ஷாட்டோ காவல்துறையிடம் கூறினார்.

இருப்பினும், அதிகாரிகள் மார்டினெஸிடம் விசாரித்தபோது, ​​ஷாட்டோ தனது உயிரியல் தந்தை என்பதையும், சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு முன்பு இருவரும் பாலியல் உறவில் ஈடுபடத்தொடங்கினர் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். இந்த பாலியல் உறவு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு ஷாட்டோவின் குடியிருப்பில் நிகழ்ந்ததாக மார்டினெஸ் கூறினார். அந்த சந்திப்புகளின் போது அவர்கள் இருவரும் போதையில் இருந்ததாகவும், ஒருவருக்கொருவர் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் மார்டினெஸ் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

ஷாட்டோவின் வீட்டில் சோதனை வாரண்ட்டை நிறைவேற்றிய பின்னர், காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தியது. அவர் முதலில் குற்றச்சாட்டுகளை மறுத்ததாகவும், ஆனால் அதன் பின்பு போலீசாரின் கடுமையான விசாரணைக்குப் பின்னர், தன மகள் மார்டினெஸிடமிருந்து நிர்வாணப் புகைப்படங்களைப் பெற்றதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும், சில மாதங்களுக்கு முன்பு, மூளை அறுவை சிகிச்சை செய்ததன் காரணமாக ஏற்பட்ட நினைவுக் குறைபாடுகள் காரணமாக, அவர்கள் எத்தனை முறை உடலுறவு கொண்டார்கள் என்பது தனக்கு நினைவில் இல்லை என்று அவர் காவல் துறையினரிடன் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் தனது மகளுடன் "ஓரிரு முறை" உடலுறவு கொண்டது நினைவிருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த அதிரவைக்கும் விசாரணைக்குப் பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மினசோட்டா சட்டத்தின்படி ஒவ்வொருவருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com