

தென் கரோலினாவைச் சேர்ந்த ஒரு 2 பெண் குழந்தைகளின் தாய், பணம் மற்றும் போதைப்பொருளுக்காக, தனது 4 மற்றும் 7 வயது மகள்களை ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.
27 வயதான ஹெலினா நிக்கோல் ஹோய்ல், தனது குழந்தைகளை கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதில், அவரது மகள்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டபோது, அவர் அந்த அறையில் தரையில் அமர்ந்து தனது கைப்பேசியில் டிக்டாக் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சம்பவமும் அடங்கும் என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இவர், கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, இரண்டு குழந்தைக் கடத்தல் மற்றும் குழந்தை புறக்கணிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெர்க்லி கவுண்டி ஷெரிஃப் புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, அந்த தாயின் இளம் மகள்கள் காவல்துறையிடம் அளித்த பேட்டியில், வெவ்வேறு காலகட்டங்களில் அடையாளம் தெரியாத பல ஆண்களால் தாங்கள் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அந்தத் தாய், பணத்திற்கும் சட்டவிரோத போதைப்பொருட்களுக்கும் ஈடாக தான் பெற்ற பிள்ளைகளையே பாலியல் வன்கொடுமை செய்தல், குழந்தைகளை விற்பனை செய்தல் போன்றவற்றை செய்துள்ளார் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், அவர் எவ்வளவு சம்பாதித்தார்? என்றோ அல்லது என்னென்ன போதைப்பொருட்கள் கைமாற்றப்பட்டன? என்றோ முழுத்தகவல்களும் வெளியாகவில்லை.
தாங்கள் வறுமையில் வாழ்வதாகவும், தங்கள் வீட்டில் குழாய் நீர் வசதி இல்லாததால் பல் துலக்கவோ குளிக்கவோ முடியவில்லை என்றும் குழந்தைகள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஹோய்ல், பெர்க்லி கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கான பிணைத்தொகை 250,000 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்