சென்னை, வியாசர்பாடி பள்ளத் தெருவை சேர்ந்தவர் 27 வயதுடைய சிவரஞ்சனி. இவருக்கும் சதீஷ் குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணாகி 6 வயதில் கிருஷ்ணன் மற்றும் மித்ரன் என்ற ஒன்பது மாத ஆண் குழந்தை உள்ளனர். சிவரஞ்சனிக்கும் அவரது கணவர் சதீஷ்குமாருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் சிவரஞ்சனி தனது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார். அப்போது சிவரஞ்சனிக்கு டாஸ்மாக் மதுபான பாரில் சப்ளையராக வேலை பார்த்து வரும் வீரசெல்வன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த (மே 2) ஆம் தேதி சிவரஞ்சனி தனது இரு பிள்ளைகளை தூங்க வைத்து விட்டு கணவருடன் தூங்கியதாகவும், மறுநாள் (மே 3) காலை சிவரஞ்சனி தனது மூத்த மகன் கிருஷ்ணனை எழுப்பிய போது குழந்தை சுயநினைவு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தன் கணவரை எழுப்பி அவருடன் சேர்ந்து குழந்தையை தூக்கி கொண்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து வியாசர்பாடி போலீசார் குழந்தை இறந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மூத்த மகன் கிருஷ்ணன் துருதுருவென (hyperactive) இருந்த நிலையில், சம்பவத்தன்று ஒன்பது மாத ஆண் குழந்தை மித்ரன் கழுத்தில் அணிந்திருந்த சாமி கயிற்றை இறுக்கி விளையாடி கொண்டிருந்திருக்கிறார். அப்போது வலி தாங்க முடியாமல் ஒன்பது மாத குழந்தை மித்ரன் சத்தமிட்டு அழுத நிலையில் அங்கு சென்ற தாய் சிவரஞ்சனி கிருஷ்ணனை சத்தமிட்டு மிரட்டுவதற்காக வீட்டில் இருந்த துப்பட்டாவை எடுத்து குழந்தை கிருஷ்ணன் கழுத்தை இறுக்கி உள்ளார். இதனால் பேச்சு மூச்சு திணறிய குழந்தை கிருஷ்ணனை தூங்க வைத்து விட்டு மறுநாள் காலை எழுப்பிய போது அவர் இறந்து கிடப்பதை பார்த்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று நிலையில் மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் குழந்தை பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை இறுக்கியதில் குழந்தை கிருஷ்ணன் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சிவரஞ்சனியை பிடித்து விசாரணை நடத்தியதில் ஒன்பது மாத குழந்தை மித்ரன் கழுத்தில் இருந்த சாமி கயிற்றை கழுத்தில் இறுக்கி கிருஷ்ணன் விளையாடிதாகவும் குழந்தையை மிரட்டுவதற்காக வீட்டில் இருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிய போது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தும், இதனை மறைத்து விட்டு சிவரஞ்சனி நாடகமாடியது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் தாய் சிவரஞ்சனி மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.