"மாற்றுத்திறனாளி மகளை கொடூரமாக சீரழித்த கணவன்.." கேமராவில் பார்க்ககூடாததை பார்த்து வேதனையில் துடித்த தாய்!

ஆஷ்லியை அவரது படுக்கையறையில் வைத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.
Sexual Assault Case
Sexual Assault Case
Published on
Updated on
2 min read

தனது மாற்றுத்திறனாளி மகளின் படுக்கையறையில் அந்த பெண்ணின் தாய் கேமராவைப் பொறுத்தியுள்ளார். ஆனால் அதில் பதிவான காட்சி அந்த தாயை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பவுலா விஜிலின் மகள் ஆஷ்லிக்கு, ஆறு வயதில் ரெட் சிண்ட்ரோம் இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது ரெட் சிண்ட்ரோம் மூளையின் வளர்ச்சியைப் பாதிக்கும் ஒரு அரிதான மரபணு நரம்பியல் கோளாறு.இந்த வளர்ச்சிக் குறைபாடு, மூளை வளர்ச்சியைப் பாதித்து, பேச்சு மற்றும் இயக்கத் திறன்களில் குறிப்பிடத்தக்க குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. இந்தக் கோளாறு உள்ளவர்கள் அடிக்கடி வலிப்பு, சுவாசக் கோளாறுகள் மற்றும் தூக்கக் குறைபாடுகளால் அவதிக்குள்ளாகுவர். மேலும், ஆஷ்லி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும், எப்போதும் ஒரு குழந்தையாகவே இருந்துள்ளார், என்று அவரது தாய் விஜில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆஷ்லி இறுதியில் தனது முப்பது வயதை எட்டியபோதிலும், அவரது உடல் வளர்ச்சி ஒரு சிறு குழந்தையின் வளர்ச்சியாகவே இருந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க விஜில், 2015-ல் தனது முன்னாள் உயர்நிலைப் பள்ளி வகுப்புத் தோழரான பிரையன் கென்னத் அர்பன் என்பவருடன் உறவைத் தொடங்கியுள்ளார். அதன் பிறகு விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். மேலும், விஜிலினின் மகள் ஆஷ்லியை மருத்துவ சந்திப்புகளுக்கு அழைத்துச் செல்ல அவரது கணவர் மிகவும் உதவியாக இருந்துள்ளார். மேலும் ஆஷ்லியின் சிகிச்சைக்காக நிதி ரீதியாகவும் விஜிலினுக்கு உதவியுள்ளார். மருத்துவரின் ஆலோசனையின்படி, தன் மகளுக்கு வரக்கூடிய வலிப்பு நோய்களைக் கண்காணிக்க விஜில் ஆஷ்லியின் அறையில் கேமராக்களைப் பொறுத்தியுள்ளார். ஒரு நாள் காலையில், தன் மகளுக்கு ஏதேனும் வலிப்பு நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கிறதா? என்பதை கண்காணிக்க ஆஷ்லியின் அறையில் உள்ள கேமராவை இயக்கியுள்ளார்.

ஒருநாள் அதை விஜிலின் சோதித்தபோது அவரது மனதை உலுக்கும் ஒரு காட்சியை கண்டுள்ளார். விஜிலினின் கணவரான பிரையன், கேமரா இருப்பது தெரியாமல், ஆஷ்லியை அவரது படுக்கையறையில் வைத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். "எங்களை நேசிப்பதாகவும், எங்கள் மீது அக்கறை கொண்டிருப்பதாகவும் கூறிய அந்த மனிதனுக்கு முன்னால், என் பாவப்பட்ட, ஆதரவற்ற மகள் அஞ்சி நடுங்குகிறாள்" என்று அந்த தாய் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதனால் அச்சமடைந்த தாய், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அந்தக் காணொளிக் காட்சிகளை அவர்களிடம் வழங்கியுள்ளார். "கடந்த 20 ஆண்டுகளில், நான் பார்த்ததிலேயே இதுதான் மிக மோசமானது", என்று ஒரு அதிகாரி ஒருவர் கண்ணீருடன் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

2024 ஜனவரியில் அர்பன் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, இரண்டு பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் மற்றும் மூன்று வலுக்கட்டாயப் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குற்றங்களால் ஒன்று முதல் 15 ஆண்டுகள் வரையிலும் அவருக்குத் தண்டனை உய்திக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மனதை நொறுக்கும் விதமாக, விசாரணை நடந்து கொண்டிருந்த காலத்தில், ஆஷ்லி தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com