மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய பேருராட்சி அலுவலக ஊழியர் கைது..!

மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய பேருராட்சி அலுவலக ஊழியர் கைது..!
Published on
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் அரூரில் மின் இணைப்பு பெற தடையின்மை சான்று பெறுவதற்கு ரூபாய் 25 ஆயிரம் லஞ்சம் கேட்ட பேருராட்சி அலுவலக ஊழியரை லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி காவலராக பணிபுரிபவர் வெங்கடாசலம் (வயது  52 ),
பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் இளவரசன் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இரண்டு கடைகள் கட்டி வருகிறார். 

இவர் தன் கடைக்கு மின் இணைப்பு பெறுவதற்காக  தடையில்லா சான்றிதழ் கேட்டுள்ளார். அப்போது அதற்கு,  வெங்கடாசலம் பணம் கேட்டுள்ளார். 

இதுகுறித்து இளவரசன் தருமபுரி லஞ்ச ஒழிப்புத் துறையில் தகவல் கொடுத்துள்ளார். உடனே, லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெங்கடாசலம் கேட்ட ரூ.25000,யில் ரசாயன பவுடரை கலந்த  கொடுத்துள்ளனர்.

பணத்தை வாங்கி கொண்டு பொம்மிடி கடை வீதி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காவலர் வெங்கடாசலம் என்பவரிடம், லஞ்ச ஒழிப்பு துறை கொடுத்த பணத்தை கொடுத்துள்ளார். 

அப்போது பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெங்கடாசலத்தை பிடித்து பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்று
விசாரணை நடத்தி வருகின்றனர். 

பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள பல்வேறு ஆவணங்களை  ஆறு மணி நேரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  யார் சொல்லி லஞ்சமாக ரூபாய் 25 ஆயிரத்தை மேல்நிலை நீர்தேக்க தொட்டி காவலர் வாங்கினார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com