ஷ்ரத்தா வழக்கு குற்றவாளி மீது கொலை தாக்குதல்... பின்னணி என்ன?!!!

ஷ்ரத்தா வழக்கு குற்றவாளி மீது கொலை தாக்குதல்... பின்னணி என்ன?!!!

Published on

ஷ்ரத்தா கொலை வழக்கு குற்றவாளி மீது தாக்குதல் எதிரொலி.  துணை ராணுவ பாதுகாப்பில் ஆப்தாப் பூனாவாலாவை அழைத்து செல்லும் டெல்லி காவல்துறை. 

மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா வால்கர் டெல்லியில் 35 துண்டுகளாக அவரது காதலரால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் ஆப்தாப் பூனாவாலா-வை டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று மாலை ஆப்தாப் பூனாவாலாவை ரோகினியில் உள்ள ஆய்வகத்திலிருந்து சிறைக்கு அழைத்துச் செல்லும்போது, ​​ஒரு காரில் வந்த கும்பல் முகத்தில் துணியை கட்டி கொண்டு வாள்-களை கொண்டு தாக்குதல் நடத்தியது. 

போலீசார் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு பாதுகாப்பாக குற்றவாளியை அழைத்து சென்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று காலை திகார் சிறையில் இருந்து மற்றொரு சுற்று பாலிகிராப் சோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது துணை ராணுவ படையின் பாதுகாப்புடன் டெல்லி காவல்துறை அதிகம் குவிக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டார். 

புனவல்லாவை நேற்று வாளுடன் கொலை செய்ய வந்தவர்கள் இந்து சேனா என்ற வலதுசாரி குழுவைச் சார்ந்தவர்கள் என்றும் கொலைக்கு வகுப்புவாத காரணம் இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com