

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே மறுகால் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிரஷாந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் நிலையில் அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பிரஷாந்திற்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நட்பாக பழகி வந்தனர், நாளடைவில் இந்த பழக்கமானது காதலாக மாறி காதலித்து வந்தனர்.
எனவே இருவரும் அடிக்கடி வெளியில் செல்வது எப்போது போனில் பேசிக் கொள்வது என நெருக்கமாக பழகி வந்தனர். இந்நிலையில் மாணவியின் பெற்றோருக்கு இவர்களது காதல் குறித்து தெரியவந்துள்ளது. எனவே முதலில் மாணவியை பிரஷாந்துடன் பேச வேண்டாம் என கண்டித்திருக்கின்றனர். இருப்பினும் மாணவி தொடர்ந்து பிரஷாந்துடன் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் பிரசாந்தை “எங்கள் மகளுடன் பேச வேண்டாம் இது சரிவராது” என கூறியுள்ளனர்.
எதையும் காதில் வாங்காத இளம் ஜோடிகள் தொடர்ந்து பழகி வந்திருக்கின்றனர். இருவரும் சேர்ந்து வழக்கம் போல வெளியில் ஊர் சுற்றிய நிலையில் இதனை பார்த்த மாணவியின் உறவினர் அவரது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மாணவியை பள்ளிக்கு செல்ல வேண்டாம் என கூறி பள்ளியை விட்டு நிறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் தினந்தோறும் மாணவி அவர்களது பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் மாணவியின் அண்ணனான சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது நண்பர்களுடன் சென்று பிரஷாந்திடம் வாக்குவாதம் செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரவணன் பிரஷாந்தை சரமாரியாக வெட்டினார். மேலும் “என் தங்கச்சியை லவ் பண்ணுவியா” என சொல்லி மிரட்டிவிட்டு அப்பகுதியில் தப்பிச் சென்றுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பிரஷாந்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தப்பியோடிய கல்லூரி மாணவன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். நடுரோட்டில் வைத்து வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.