கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் கொலை

கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் கொலை

உத்தமபாளையம் அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணை தாயும், கணவரும் தீர்த்து கட்டியது  அம்பலமாகியுள்ளது.
Published on

உத்தமபாளையம் அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணை தாயும், கணவரும் தீர்த்து கட்டியது  அம்பலமாகியுள்ளது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாணகுமார். கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ள நிலையில் திடீரென ரஞ்சிதா இறந்து விட்டதாக கூறி அவரது கணவரும், ரஞ்சிதாவின் தாய் கவிதாவும் சேர்ந்து அங்குள்ள மயானத்தில் எரித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பாதி எரிந்த நிலையில் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ரஞ்சிதாவின் தாயும் கணவனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றது உறுதியானது.

மேலும் ரஞ்சிதாவுக்கும், ஆனைமலையன்பட்டியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், அதனை கைவிட மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த இருவரும் ரஞ்சிதாவை திட்டமிட்டு சேலையால் கழுத்தை இறுக்கி தீர்த்து கட்டியது அம்பலமானது. இதனையடுத்து கல்யாணகுமார், கவிதா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த ஆனந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com