மர்மமான முறையில் இளம்பெண் உயிரிழப்பு.. கிரிக்கெட் மட்டையால் கணவர் அடித்து கொன்றுவிட்டதாக புகார்!!

சேலம் அருகே இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் கணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மர்மமான முறையில் இளம்பெண் உயிரிழப்பு.. கிரிக்கெட் மட்டையால் கணவர் அடித்து கொன்றுவிட்டதாக புகார்!!
Published on
Updated on
1 min read

சேலம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த கீர்த்திராஜ்(31), தனஸ்ரீயா(26) தம்பதியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமண கோலத்தில் இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பலரையும் கவர்ந்தனர்.

இந்நிலையில், கணவன்,மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறில்  தனஸ்ரீயா கணவரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து,பெற்றோர் வீட்டில் தனஸ்ரீயா வசித்து  வந்துள்ளார். இதனிடையே நேற்று சமாதானம் செய்து கணவர் கீர்த்திராஜ் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு தனஸ்ரீயா தற்கொலை செய்து கொண்டதாக கீர்த்திராஜ் குடும்பத்தினர் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த தனஸ்ரீயா பெற்றோர் நேரில் சென்று பார்த்தபோது, தனஸ்ரீயா தலைப் பகுதி மற்றும் உடல் முழுவதும் ஆங்காங்கே காயங்கள் இருந்துள்ளது.

இதுதொடர்பாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, தனஸ்ரீயாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கணவர் மற்றும் அவரின் பெற்றோர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருமணமான நாளிலிருந்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாகவும், திட்டமிட்டு தனது மகளை அழைத்துச் சென்று கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடுவதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.  தனது மகள் மரணத்திற்கு முறையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com