“பணத்திற்காக கொல்லப்பட்ட VAO” - படுத்திருந்தவர் தலையில் கல்லை போட்டு .. திருநங்கைகள் செய்த கொடூரம்!
நாகப்பட்டினம் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை முகம் மற்றும் கை கால்களில் பலத்த காயங்களுடன் 40 வயதுடைய ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்ததது யார்? கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என விசாரணை மேகொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்து கிடந்தவர் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூர் கிராம நிர்வாக அலுவலரான 40 வயதுடைய ராஜாராமன் என்பதும் இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு எட்டுக்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய போது பட்டா மாற்றத்திற்காக வந்த அப்பகுதி மக்களிடம் பணம் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து மக்கள் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த ராஜாராமன் நேற்றைய தினம் அந்த வழக்கு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு சென்று வந்த நிலையில் அவரை வழி மறித்த மர்ம நபர்கள் தலை, கை கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக கல்லால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜாராமன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் இரவில் ராஜாராமன் அந்த பகுதியில் போதையில் படுத்திருந்ததாகவும், அப்போது அங்கு வந்த செல்லுரைச் சேர்ந்த நிவேதா, ஸ்ரீகவி ஆகிய இரண்டு திருநங்கைகள் அவர் முகத்தில் கருங்கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த பணம், செல்போன், மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து செல்லூர் திருநங்கைகள் குடியிருப்பிலுள்ள திருநங்கைகளை அழைத்து வந்து விசாரணை செய்ததில் நிவேதா, ஸ்ரீகவி இருவரும் கடலூருக்கு தப்பி சென்றது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து நாகை தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் தனிப்படை அமைத்து கைது செய்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.
.png)
