"தனிமையில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடி" - கர்ப்பமான 17 வயது சிறுமி! கருக்கலைப்பிற்கு சென்ற இடத்தில் சிக்கியது எப்படி?

தனி அறை கொண்ட ஒரு கஃபேக்கு சென்றுள்ளனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் அந்தப் பெண் கர்ப்பமாகி உள்ளார்.
Nagpur POCSO case
Nagpur POCSO case
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூர், மூரங்கா சௌக் அருகே உள்ள ஒரு தனியார் கேபின் கஃபேவில், தனது 19 வயது முன்னாள் வகுப்புத் தோழருடன் ஏற்பட்டதாகக் கூறப்படும் உடல்ரீதியான உறவின் காரணமாக, அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கருவுற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரில் இளம் தம்பதிகளுக்குத் தனிமையான கேபின்களை வெளிப்படையாக விளம்பரப்படுத்தும் கஃபேக்கள் குறித்த விவாதத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் தகவல்படி, அந்தப் பெண்ணும் குற்றம் சாட்டப்பட்ட சமீர் கானும் 2024-ம் ஆண்டில் பள்ளியில் 11-ம் வகுப்பு அறிவியல் பிரிவில் சக மாணவர்களாக இருந்துள்ளனர். முதலில் நட்பாக துவங்கிய இவர்களது உறவு பின்னர் காதலாக மாறியுள்ளது. கான் பள்ளியை விட்டு வெளியேறிய போதிலும், இருவரும் தொடர்ந்து சந்தித்த வண்ணமே இருந்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த மே 1 அன்று, இரவு சுமார் 7 மணியளவில், அந்த காதல் ஜோடி கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தனி அறை கொண்ட ஒரு கஃபேக்கு சென்றுள்ளனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் அந்தப் பெண் கர்ப்பமானதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதன் பின்னர், சிறுமியின் தாயும் பாட்டியும் அவரைக் கருக்கலைப்பு செய்வதற்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விஷயமறிந்த மருத்துவமனை அதிகாரிகள் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த தந்தோலி காவல் நிலைய ஊழியர்கள் மருத்துவமனையில் சிறுமியிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். மேலும், கோட்வாலி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட போக்சோ மற்றும் பிற பிரிவுகளின் கீழ் குற்றத்தைப் பதிவு செய்துள்ளனர். காதலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்னும் தலைமறைவாக உள்ளார் என்று காவல்துறையினரால் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது, இதுபோன்ற தனிமையான கேபின் கொண்ட கஃபேக்கள் மீதான சோதனைகளைத் தீவிரப்படுத்துமாறு காவல்துறை மூத்த அதிகாரிகள் உள்ளூர் பிரிவுகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் எச்சரிக்கையும், சிறுமியின் வாக்குமூலமும் விசாரணையின் மையமாக அமையும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கஃபேயின் செயல்பாடு, உரிமம் மற்றும் இளம் தம்பதிகளுக்குத் தனி அறைகள் வழங்கப்படும் விதத்தினை குறித்த முழுமையான ஆய்வு செய்யப்படும் என்றும் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com