16 வயதில் கடத்தப்பட்டு.. பலமுறை உடலுறவு! கட்டாயத் திருமணம் செய்ய ஆதார் கார்டு மோசடி - 6 ஆண்டுகளுக்குபின் வெளிவந்த உண்மைகள்

2020-ம் ஆண்டு தனது 16-வது வயதில் கடத்தப்பட்டு, ஒரு இளைஞரால் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
POCSO case
POCSO case
Published on
Updated on
2 min read

நாக்பூரில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாகச் சுரண்டப்பட்டு, கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையை அணுகி, பல ஆண்டுகளாகத் தான் அனுபவித்த உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளை காவல்துறையிடம் விவரித்துள்ளார்.

அவரது புகாரின்படி, அந்தப் பெண் 2020-ம் ஆண்டு தனது 16-வது வயதில் கடத்தப்பட்டு, பின்னர் ஒரு இளைஞரால் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், போலியான ஆதார் அட்டையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயரும் அவரது வயதும் மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார், கட்டாய மதமாற்றம் நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவமானது, 2020 ஆகஸ்ட் 13-ம் தேதி மங்காபூர்-ஜிங்காபாய் டக்லி பகுதியில் தொடங்கியது. புகார்தாரரின் கூற்றுப்படி, அப்போது சுமார் 21-24 வயதுடைய சமீர் அலி என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், அந்த சிறுமியை கடத்திச் சென்று தனது மனைவி போல் பாவித்து பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர், மங்காபூர் சௌக் அருகே ஓர் இடத்தில் சமீர் வேலை செய்து வந்துள்ளார். மேலும், இவர்களது உறவைச் சட்டப்பூர்வமாக்குவதற்காக, குற்றம் சாட்டப்பட்டவர், சிறுமியை வயது வந்தவராகக் காட்டும் வகையில், சிறுமியின் பெயரை மாற்றி, அவரது வயதை அதிகரித்து ஒரு போலி ஆதார் அட்டை ஒன்றை தயாரித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், 2021-ம் ஆண்டில், சமீரின் குடும்ப உறுப்பினர்களான 45 வயதான அஜிஸா முனீர் அலி மற்றும் 50 வயதான முனீர் அலி ஆகியோர் முன்னிலையில், அந்தப் பெண் அவஸ்தி சௌக் என்ற பகுதிக்கு அருகே உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், புகார்தாரரின் கூற்றுப்படி, மௌலானா அன்வர் அவர்களால் அவர்களது திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது நான்கு வயதுக் குழந்தையின் தாயாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மதமாற்றம் மற்றும் சுரண்டல் நோக்கத்தில் சமீர், அஜீஸா மற்றும் முனீர் ஆகியோர் தன்னை ஏமாற்ற சதி செய்ததாக அந்த சிறுமி தற்போது குற்றம் சாட்டியதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி போலி ஆதார் அட்டையைப் பயன்படுத்தி சிறுமியை அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. சம்பவங்களின் வரிசையை குழுக்கள் சரிபார்த்து வருவது, ஆதார் அட்டையை ஆய்வு செய்வது, திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் நபர் உள்ளிட்ட சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வது, மற்றும் மருத்துவ, தடயவியல் ஆதாரங்களைச் சேகரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருவதாக மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடத்தல் மற்றும் ஆரம்பகட்ட சுரண்டல் நடந்த நேரத்தில் அந்தப் பெண் சிறுமியாக இருந்துள்ளார். திருமணத்திற்காக அவர் (சிறுமி) ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றப்பட்டு, மதம் மாறக் கட்டாயப்படுத்தப்பட்டாரா? என்பது குறித்து புலனாய்வாளர்கள் குறிப்பாக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. போலீசார், பாரதிய நியாய சம்ஹிதாவின் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான போக்சோ சட்டத்தின் பிரிவுகள் மற்றும் குழந்தை திருமணத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆவண மோசடி மற்றும் குற்றச் சதி தொடர்பான பிரிவுகளும் குற்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com