
தென் மாவட்டங்களில் சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சிறுவர்களும் இளைஞர்களும் சாதி ரீதியிலான வன்முறைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நாங்குநேரி சின்னத்துரைக்கு நேர்ந்த கொடூரம் நாம் அனைவரும் அறிந்ததே. பள்ளி பிள்ளைகளுக்கு இந்த வன்முறையையும், சாதி ரீதியிலான உணர்வுகளையும் தொடர்ந்து தூண்டிக்கொண்டே இருக்கின்றனர்.
சமீபத்தில் தான் தனது சகோதரி வேறு சமூகத்தை சேர்ந்த ஆணை காதலிக்கிறார் என்று தெரிந்ததற்காக கவின் என்ற நபரை சுர்ஜித் என்ற இளைஞன் வெட்டி படுகொலை செய்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சோகத்தின் நடுவே இன்னும் ஆறாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது, “திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந் சிறுவன், அங்குள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.. இவர் அருகிலுள்ள கூனியூர் என்ற பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்த காதல் விவகாரம் குறித்து எப்படியோ சிறுமியின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதனால் அந்த சிறுமியை வீட்டில் கண்டித்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் சிறுமியின் உறவினர்களான சிறார்கள் 5 பேர் சேர்ந்து நேற்று இரவு (ஆகஸ்ட் 5) சிறுவனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கு சிறுவன் வீட்டிலிருந்த அரிவாளாலேயே சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுவன், சேரன்மகாதேவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
படிக்கும் வயதில் குழந்தைகள் இதுபோன்று மோசமான ஒரு வன்முறையில் ஈடுபடுவது தேசத்திற்கே கேடாகும். மேலும் தென் மாவட்டங்களில் தொடர் அசம்பாவிதங்கள் ஏற்படுவதால், அந்த பகுதிகளை வன்கொடுமை நிறைந்த மண்டலமாக அறிவித்து அங்கு கூடுதல் பாதுகாப்பு தர வேண்டும் என பல அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.