தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் விருகம்பாக்கம் சின்மையா நகர், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் இதே பாணியில் 8 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் வரை கொள்ளையடித்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.