
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜெகன்நாதன்(30). இவரது சொந்த ஊர் செஞ்சி ஆகும். பி.எஸ்.சி., பட்டதாரியான தனியார் நிறுவன டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வந்தவாசி கிராமத்தை சேர்ந்த பி.காம்., பட்டதாரியான ஷாலினி(26) என்பவருக்கும் கடந்த மாதம் 28 -ம் தேதி நங்கநல்லூரில் திருமணம் நடந்தது. இருவரும் மறு வீட்டு நிகச்சிக்காக அவர்களது சொந்த ஊரான வந்தவாசிம், செஞ்சிக்கும் சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பினர்.
இந்நிலையில் ஷாலினி தனக்கு தலைவலிப்பதாகவும் மாத்திரை வாங்கி வரும்படியும் கூறி கணவரை கடைக்கு அனுப்பியுள்ளார். ஜெகன்நாதனும் மாத்திரை மற்றும் உணவு வாங்கி கொடுத்துவிட்டு அதே பகுதயில் வசிக்கும் தனது சகோதரி விஜயா என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மதியம் சகோதரி வீட்டில் சாப்பிடுவதற்காக செல்போனில் ஷாலினியை அழைத்து உள்ளார். பல முறை தொடர்பு கொண்டு அவர் பதிலளிக்கவில்லை. இதையடுத்து வீட்டிற்கு வந்து கதவை தட்டினார். உட்புறம் தாழிடப்பட்டிருந்திருக்கிறது. நீண்டநேரம் தட்டியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த ஜெகன்நாதன் ஜன்னலை திறந்து பார்த்தபோது, ஷாலினி அறயைில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்துள்ளார். இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் -க்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து ஷாலினியை மீட்டு வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து ஷாலினி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷாலினியின் சித்தி கூறுவது என்ன?
மருத்துவமனைக்கு வந்த பெண்ணின் உறவினர்கள் மாப்பிள்ளை வீட்டார் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தினர், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஷாலினியின் சித்தி “திருமணமாகி என் வீட்டிற்கு தான் விருந்துக்கு வந்தாங்க, ஆனால் எப்பவும் அவன் (ஜெகன்நாதன்) போனிலேதான் பேசிட்டு இருந்தான், ஒரு கூட எங்க பொண்ணு கூட ஆசையா பேசல.. என் பொண்ணு போரப்போ அவ நகையை கழட்டி எங்கிட்ட கொடுத்துட்டு நீ சென்னை வரப்போ கொண்டு வா -னு சொல்லிட்டு போச்சு..”
மாப்பிள்ளைக்கு ஏதேனும் தகாத உறவு இருந்ததா?
அவனுக்கும் அவன் அக்கா பொண்ணுக்கும் ஏதோ உறவு இருக்கு போல சார்..ஏற்கனவே அவன் அண்ணியோட உறவுல இருக்கறதா சொல்றாங்க..அந்த வீட்டு பீரோ சாவிகூட அவன் அக்காகிட்டாதான் இருக்கு.. இவன், இவன் அக்கா, அண்ணா,அண்ணி எல்லாரும் சேர்ந்துதான் எங்க பொண்ண கொன்னுட்டாங்க. யாராவது பொண்டாட்டி சேதத்தை சிரிச்சிகிட்டே சொல்லுவானேன், என் பொண்ணுகிட்ட போன் பண்ணி அவ உங்க அக்கா suicide பண்ணிட்டானு சிரிச்சிட்டே சொல்றா சார்” என குற்றம்சாட்டியிருக்கிறார்.
திருமணமாகி 9 நாட்களே ஆன நிலையில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.