

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே கணவனை இழந்த பெண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணைத் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள கழுகுமலை கே.வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவற்றின் மகன் 28 வயதுடைய அருண் விஜய். இவர் கட்டுமானகளில் சென்ட்ரிங் அமைக்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்து குழந்தையுடன் தனியாக வசித்து வரும் பெண்ணுக்கு அருண் விஜய் தனது வாட்ஸ் அப் மூலம் தொடர்ந்து ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அருண்விஜயைக் கண்டித்து, இதுபோன்ற குறுஞ்செய்திகளை அனுப்ப வேண்டாம் என எச்சரித்துள்ளார். ஆனால், பெண்ணின் கண்டிப்பையும் மீறி அருண்விஜய் மீண்டும் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், தனது பாலியல் இச்சைக்கு இணங்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். பெண்ணுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் குறுஞ்செய்திகள் மற்றும் புகாரில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அருண்விஜயைக் கைது செய்தனர். புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அருண்விஜயை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்புதல், மிரட்டல் விடுத்தல் மற்றும் தொடர்ந்து தொல்லை கொடுத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்