"2 குழந்தைகளை கொடூரமாக சீரழித்த பராமரிப்பாளர்.." வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்த வக்கிரம்! நீதிபதி கேட்ட அந்த ஒரு கேள்வி

மோலி, சமூக ஊடகங்கள் வழியாக மற்ற குற்றவாளிகளுடன் அந்த வக்கிரமான காணொளிகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Child sexual abuse case
Child sexual abuse case
Published on
Updated on
2 min read

இரண்டு கைக்குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, அந்த வன்கொடுமையைத் தனது கைப்பேசியில் பதிவுசெய்த ஒரு 'கொடுமைக்கார' குழந்தை பராமரிப்பாளருக்கு, பரோல் வாய்ப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, ஓஹியோவின் பீச்வுட்டைச் சேர்ந்த 26 வயதான மோலி எலிசபெத் டங்கன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு குழந்தைகளை பார்த்துக்கொள்பவராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு அந்த மாநிலத்தில் பத்து வருட குழந்தை பராமரிப்பு அனுபவமும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டங்கன், போர்டேஜ் கவுண்டியில் ஒரு குழந்தையையும், ஜியோகா கவுண்டியில் மற்றொரு குழந்தையையும் பாலியல் வன்கொடுமை செய்து, அச்செயல்களைத் தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார். அந்த சமயத்தில் இரு குழந்தைகளும் இரண்டு வயதுக்குட்பட்டவர்களாக இருந்துள்ளனர். பின்னர் மோலி, சமூக ஊடகங்கள் வழியாக குழந்தைகளை இரையாக்கும் மற்ற குற்றவாளிகளுடன் அந்த வக்கிரமான காணொளிகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். மோலியின் மின்னணு சாதனங்கள் மீதான தடயவியல் விசாரணையின் போது, அந்த குழந்தைகளுக்கு எதிரான ஆபாசமான காட்சிகள் கண்டறியப்பட்டன.

போர்டேஜ் கவுண்டி வழக்கில், நீதிபதி லாரி பிட்மேன் கடந்த ஜூலை 24 அன்று, பரோல் இல்லாத நான்கு தொடர்ச்சியான ஆயுள் தண்டனைகளை விதித்து, "மோலி தனது வாழ்நாளின் எஞ்சிய நாட்களைச் சிறையில் மட்டுமே கழிப்பார்" என்பதை உறுதி செய்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும், மோலி மீது நான்கு கடுமையான பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளும், மேலும் பல கூடுதல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு, மோலி குற்றவாளி என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதிபதி மோலியைப் பார்த்து, "நான் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கப் போகிறேன்; இதுவெல்லாம் சரி என்று நீ நினைக்கும் அளவுக்கு உன் வாழ்க்கையில் அப்படி என்னதான் நடந்தது?" என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.

இதில் பெயர் வெளியிடப்படாத ஒரு குழந்தையின் தாய், "உலகில் தீமைக்கு ஒரு பெயர் இருக்கிறது என்றால் அது மோலிதான்" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். "இது என் குழந்தையை மட்டுமல்ல, எங்கள் முழு குடும்பத்தையும் பாதித்துள்ளது," என்று அவர் கூறியுள்ளார். தனது அறிக்கையில், மோலி தனது செயல்களுக்குப் பகுதியளவு காரணம் தனது மனநலப் போராட்டங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் அனுபவித்த துன்புறுத்தல்களே என்று கூறி மன்னிப்புக் கோரியுள்ளார். இதனையடுத்து கடந்த ஜூலை 22 அன்று, நீதிபதி ஜியோகா கவுண்டியைச் சேர்ந்த குழந்தைகளை துன்புறுத்திய குற்றத்திற்காக 70 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சிறைத் தண்டனைக் காலம் முடிந்த பிறகு 25 ஆண்டுகள் காவல்துறையால் மேற்பார்வையிடப்பட்ட விடுதலையும் விதித்திருந்தார். மேலும், ஏப்ரல் மாதம் சிறார்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டியது, குழந்தைகளைச் சித்தரிக்கும் பாலியல் ரீதியான உள்ளடக்கங்களை விநியோகித்தது மற்றும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை வைத்திருந்தது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை மோலி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, 20,000 டாலர் அபராதமும் மோலிக்கு விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com