சாக்லேட் வாங்கித் தந்து சிறுவனிடம் தவறாக நடந்த முதியவர் கைது...

தனிமையில் அழைத்து சென்று சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்ட முதியவருக்கு 7 ஆண்டு சிறை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சாக்லேட் வாங்கித் தந்து சிறுவனிடம் தவறாக நடந்த முதியவர் கைது...
Published on
Updated on
1 min read

சிவகங்கை | திருப்பத்தூர் அருகே இளையாத்தங்குடி. அம்பேத்கார் தெருவை சேர்ந்த 8 வயது சிறுவனை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கடந்த 09.06.2019 ஆம் தேதி அன்று கீழசேவல்பட்டியை சேர்ந்த 60 வயதான கருப்பையா என்பவர் சிறுவனுக்கு சாக்லெட் கொடுத்து தனிமையில் அழைத்து சென்றுள்ளார்.

பின், தகாத முறையில் கொடுரமாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். வலி தாங்கு முடியாமல் கத்திய சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்டு ஊர் மக்கள் திரண்டு சிறுவனை மீட்டுள்ளனர். அப்போது கருப்பையா அங்கிருந்து தப்பி தலைமறைவானார்.

இதுகுறித்து சிறுவனின் தாயார் ஜெயா, கீழ சேவல்பட்டி காவல் நிலையத்தில் சிறுவனை அழைத்துச் சென்று நடந்த சம்பவத்தை சிறுவன் மூலமாவே தெரிவித்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கீழச்சேவள்பட்டியில் 12.6.2019 அன்று வழக்கு பதிவு செய்து சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இன்று போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது முதியவர் கருப்பையாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரத் ராஜ் தீர்ப்பு வழங்கினார்.

மூன்றாம் வகுப்பு படித்து வந்த சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது பெறும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com