மோதிரத்திற்காக முதியவர் கொலை... இளைஞர் கைது...

அரியலூர் அருகே மோதிரத்திற்காக முதியவரை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மோதிரத்திற்காக முதியவர் கொலை... இளைஞர் கைது...
Published on
Updated on
1 min read

அரியலூர் | தேளூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. அக்கிராம நாட்டார் ஆன இவர் தன்னுடைய வயலில் ஆர்எஸ்பதி நடவு செய்து இருந்தார். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதியன்று தன்னுடைய வயலுக்கு சென்றவர் மாலை நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.

அங்கு தலையில் அடிப்பட்டு கோவிந்தசாமி உயிர் இழந்து கிடந்துள்ளார். இதனையறிந்த கயர்லாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து அரியலூர் டிஎஸ்பி சங்கர்கணேஷ், இன்ஸ்பெக்டர் கோபிநாத், எஸ் ராஜவேல் தலைமையிலான தனிப்படை அமைக்கபட்டது. இந்த தனிப்படை போலீசார் வி.கைகாட்டி பகுதியில் அடகுகடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவினை ஆய்வு செய்தனர்.

அதில் சந்தேகபடும் அளவிலான நபர் ஒருவர் மோதிரம் ஒன்றை அடகுகடையில் விற்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த மோதிரத்தை பார்த்தபோது அது கோவிந்தசாமி அணிந்திருந்த மோதிரம் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து மேலும் விசாரணையை தீவிரபடுத்திய போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட விளாங்குடி சிந்தாமணி காலணியை சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் விசாரணை செய்தபோது கடன்பிரச்சனை மற்றும் குடும்ப வறுமையால் கோவிந்தசாமியை கொலை செய்து அவர் அணிந்திருந்த மோதிரத்தை திருடியது தெரியவந்தது. பின்னர் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com