திருமணமான 15 நாளில்... கோமாவிற்கு சென்ற புது மாப்பிள்ளை... 

திருமணமான 15 நாளில்... கோமாவிற்கு சென்ற புது மாப்பிள்ளை... 
Published on
Updated on
1 min read

திருமணம் ஆன 15 நாளில் புது மாப்பிள்ளைக்கு தலையில் வெட்டு இரண்டு தையல் போட்ட நிலையில் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது.  

குடிபோதையில்:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழைமேடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயமணி.  இவர் குடிபோதையில் உதயநத்தம் கிராமத்தில் கார்த்திக் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.  அதனைத் தொடர்ந்து கார்த்திக் என்பவர் ஜெயமணியை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  

தகவல் கூறியதால்:

தகராறு தொடர்பாக பேசும் போது ஜெயமணி தழுதாழைமேட்டை சேர்ந்த பவித்ரன் என்பவர் தான் அவரை பற்றி தகவல் கூறியதாக தெரிவித்துள்ளார்.  இதனால் திருமணமாகி 15 நாட்களே ஆன பவித்திரனை தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார் ஜெயமணி.  மேலும் பவித்ரனின் தந்தை சேட்டு என்பவரையும் தாக்கியுள்ளார்.

கோமாவில்:

இதில் தலையில் வெட்டுபட்ட பவித்ரன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்ட காரணத்தால் அங்கிருந்து  திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  தற்போது பவித்ரன் கோமா நிலையில் உள்ளதால் மீன்சுருட்டி காவல் துறையினர் இரண்டு தனிப்படை அமைத்து ஜெயமணியை தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com