sammar das
sammar das

ஒரு வயசு பிஞ்சு அது.. எப்படி மனசு வந்துச்சு? இந்த லட்சணத்துல எஸ்கேப் முயற்சி வேற.. மிருகம் கூட இப்படி பண்ணாது!

சம்மர் தாசுடன் வாழ்ந்து வந்துள்ளார், ஒரு வயது பெண் குழந்தை, இரண்டு ஆண் குழந்தையுடன்
Published on

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு மெயின் ரோட்டில் உள்ள வாடகை வீட்டில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சம்மர்தாஸ்(33) அவரது மனைவி ஆகியோர் தம்பதிகளாக வசித்து வருகின்றனர்.

சம்மர்தாஸின் மனைவி ஏற்கனவே திருமணம் ஆகி கணவனை பிரிந்து, சம்மர் தாசுடன் வாழ்ந்து வந்துள்ளார், ஒரு வயது பெண் குழந்தை, இரண்டு ஆண் குழந்தையுடன், சம்மர்தாசுடன் டிவிஎஸ் மேடு பகுதியில் ஆட்டோ லூம் நிறுவனத்தின் குடியிருப்பில் தங்கி, இருவரும் நெசவுத்தொழில் செய்து வருகின்றனர். மேலும் சம்மர்தாஸ் குடிப்பழத்திற்கு அடிமையானதால் இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்று கிழமையன்று, இரவு குடிபோதையில் சம்மர்தாஸ் வீட்டுக்கு வந்தார். இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படவே , மனைவியை தாக்கிவிட்டு சம்மர்த்தாஸ் தனது மனைவியின் ஒரு வயது பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியில் செல்ல முயன்றார். அப்போது அவருடைய மனைவி தடுத்துள்ளார். ஆனால், அவர் வலுக்கட்டாயமாக குழந்தையை பிடுங்கிக்கொண்டு வெளியே சென்றார், சிறிது நேரத்திற்கு பிறகு குழந்தையுடன் வீடு திரும்பினார். அப்போது, அந்த குழந்தையின் ஆடையில் ரத்தக்கறை படிந்திருந்தது.

குழந்தையின் கை,கால் ஆகிய பகுதிகளிலும் ரத்த காயம் இருந்ததால் குழந்தையை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில், குழந்தையின் தாய் சேர்த்தார். அப்போது மருத்துவ பரிசோதனையில், குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் அறிந்த நாமக்கல் ஏஎஸ்பி மற்றும் டிஎஸ்பி கிருஷ்ணன் ஆகியோர், மருத்துவனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், வீட்டிற்கு சென்று அங்கு பதுங்கி இருந்த, குழந்தையின் வளர்ப்பு தந்தை சம்மர்தாசை, காவல் நிலையத்துக்கு அழைத்து வர போலீசார் முற்பட்டபோது, அவர் தப்பி ஓட முயன்றார்.

அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து கால், கை முறிவு ஏற்பட்டது .

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com